nan

nan seivathu eppadi

வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ் கொடுங்கள்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

டியர் குமாரி, எப்படி இருக்கின்றீர்கள்? சுத்தமான வீடு என்றால் தட்டுமுட்டு சாமான்கள் இல்லாத வீட்டை அப்படி அழைக்கலாம். இந்த தட்டுமுட்டு சாமான்களால் தான் வீடு மிகவும் சீக்கிரத்தில் அழுக்காகி விடுகின்றது என்பதை நாம் உணர முடிவதில்லை காரணம் நமக்கு அவைகள் எப்போதாவது உதவும் என்ற நோக்கத்தில் எதையும் தூர போடாமல் அடைத்து வைத்திருப்போம்.இவைகள் இடத்தையும் அடைத்துக் கொண்டு தூசும் ஏற்ப்பட காரணமாகின்றன.
முதலில் வாசற்படியிலிருந்து நாம் பார்த்தோமானால் நமக்கு தினப்படி தேவைப்படாத பொருட்கள் தான் அதிகம் இருக்கும். ஆகவே தேவையில்லாத பொருட்களை தயவுதாட்சனையின்றி அகற்றி விடுங்கள்.
படித்துமுடித்த புத்தகங்கள், செய்தித்தாள்களை சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் அகற்றி விடுங்கள்.
வீட்டிற்க்கு தேடி வரும் flyers,mail போன்ற தபால்களை உடனுக்குடன் அன்றே பிரித்துப் பார்த்து தேவையில்லாததை அகற்றி விடுங்கள்.
பொருட்கள் வாங்கும் அட்டை பெட்டிகளை அதன் வாரன்டி முடியும் வரை வைத்திருந்து பிறகு அகற்றி விடுங்கள்.
உபயோகிக்காத உடைகளை சேர்த்து வைப்பதால் பயன் இல்லை.ஆகவே அவற்றை தேவைப் படுவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.
குழந்தைகள் உபயோகிக்காத துணிமணிகள், புத்தகங்கள்,விளையாட்டு சானான்களையும் சேர்த்து வைக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்.
அதைப்போல சமையலறையிலும் தேவையில்லாத பொருட்களை வாங்கி இடம் நிறைய இருக்கின்றது என்ற காரணத்திர்க்காக அடைத்து வைப்பதால் அங்கும் அழுக்கு தான் மின்சும்.
எல்லா அறைகளிலும் ஒன்றிரண்டு இயற்கையான செடிகளை வைத்தோமானால் வீட்டில் உள்ள காற்று தூய்மையாக இருக்க உதவும்.
முக்கியமாக எந்த பொருளையும் பிறகு பயன்படும் என்ற நோக்கில் வைக்கும் பெரும்பாலான பொருட்களால் எந்த பயனும் ஏற்ப்படாது.என் அனுபவத்தில் அப்படி எடுத்து வைக்கும் எந்த பொருளையும் இது வரையில் நான் உபயோகப் படுத்தியதில்லை.
மேலும் இப்படி தட்டுமுட்டு சாமன்கள் இல்லாத வீட்டை சுத்தமாக பராமரிக்கவும் சுலபமாயிருக்கும்.
பொதுவாக வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களும் அந்தந்த இடங்களில் இருக்கு வேண்டும். வீட்டிற்க்கு அதிகம் தேவைஇல்லாத பொருட்கள் வாங்குவதை பழக்கபடுத்திக் கொள்ளக் கூடாது.
மற்றபடி வாரத்திற்க்கு ஒரு முறையாவது வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் தூசுபடியாமல் துடைத்து விட்டு வேக்யூம் போட்டால் போதும் என்று நினைக்கின்றேன்.

பின் குறுப்பு: மேலும் தங்களுக்கு வீட்டை பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து வீட்டுக் குறிப்புகள் என்ற தலைப்பில் கேட்டீர்களானால் மற்றவர்களுக்கும் வாசிக்க, பதிலளிக்க, உதவியாக இருக்கும்.நன்றி.

எப்படி மேடம் வீட்டிற்க்கு வந்துபார்த்த மாதிரி சொல்லுறிங்க.நீங்க சொன்னது அத்தனையும் உன்மைதான்.இன்றே அவைகளை அகற்றிவிடுகிறேன்.நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்