லால் மாஸ்

தேதி: January 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்கள் வழங்கியுள்ள லால் மாஸ் என்ற இராஜஸ்தானி உணவுக் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

மட்டன் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 10
வெங்காயம் - ஒன்று
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை
நெய் - 3 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு
தாளிக்க :
மிளகாய் வற்றல் - 2
பட்டை
லவங்கம்
கருப்பு & பச்சை ஏலக்காய்


 

6 மிளகாய் வற்றலை சூடான நீரில் ஊற வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டனுடன் உப்பு, சிறிதளவு மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு மேசைக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் ஊற வைத்த மட்டனைச் சேர்த்து வதக்கி, மீதமுள்ள மிளகாய் விழுது, மல்லித் தூள் மற்றும் தயிர் சேர்த்துக் கிளறி மூடி வைத்து ஒரு விசில் வரவிட்டு 15 நிமிடங்கள் சிறு தீயில் வைத்திருக்கவும்.
மட்டன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்ததும் திறந்து, கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான, காரசாரமான லால் மாஸ் தயார். மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

காரமான அசைவ உணவு விரும்புபவர்களுக்கேற்ற சரியான உணவு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராஜஸ்தான் லால் மாஸ் ரொம்ப‌ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

அன்புடன்
பாரதி வெங்கட்

i tried this. It was smelling of cloves even after sauting. i am not sure why. Also i had to simmer it for a long time so that the curd thickens

பாரதி மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மணிமேகலை சரியா ஸ்டெப்ச ஃபாலோ பன்னுங்க சரியா வரும். ரொம்ப நல்லா இருக்கும் ஸ்பைசி & டேஸ்டி டிஷ் இது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரான சுவையான குறிப்பை கொடுத்த வனிக்கு நன்றி எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு வனி இந்த டிஷ் இதுவரை 3 முறை செய்துட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.