பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா

தேதி: January 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மட்டன் - ஒரு கிலோ
மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
நறுக்கிய தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப


 

கறியைக் கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் போட்டு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் போட்டு பிசறி, 100 கிராம் வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு போட்டுக் கிளறவும். பிறகு குக்கரை மூடி 10 விசில் வரவிட்டு, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை).
கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் குக்கரில் வேக வைத்த கறிக் கலவையைக் சேர்த்துக் கிளறவும்.
கறி தண்ணீர் விட்டு தான் இருக்கும். சிறிது நேரம் கிளறினால் தண்ணீர் வற்றிவிடும். நன்றாகத் தண்ணீர் வற்றியவுடன் மிளகுத் தூள் போட்டு சிறு தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான மட்டன் சுக்கா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் சுவா. மட்டன் சுக்கா சூப்பரோ சூப்பர். எல்லா ரெசிபியும். சூப்பர்.

Be simple be sample

சமையல் ராணி சுவாக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. முகப்பு சும்மா ஜொலிக்குது. அசத்தல்டா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அனைத்து குறிப்புகளையும் மிக அழகாக வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவா வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவ் மிக்க நன்றிம்மா வாழ்த்துகளுக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.