பூண்டு சாதம்

தேதி: January 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் பூண்டு சாதம் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பூண்டு - 10 பற்கள் (பெரிய பல்லாக)
தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகு -10
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி - 10
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - 2
பட்டை - ஒரு துண்டு
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா - சிறிது


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, முந்திரி, பெருஞ்சீரகம், புதினா, பச்சை மிளகாய் போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அரிசியைச் சேர்த்து, உப்பு போட்டு வேகவிட்டு இறக்கவும்.
சுவையான பூண்டு சாதம் தயார். கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கவிதா. சூப்பர் பூண்டுசாதம். எல்லா குறீப்பும் சூப்பரா இருக்கு

Be simple be sample

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய ஆமினா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

ரேவதி
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பூண்டு சாதம் செயச்ல்முறை அருமை