கொத்து பரோட்டா

தேதி: January 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் கொத்து புரோட்டா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.

 

பரோட்டா - 3
சால்னா - 2 தேக்கரண்டி
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பரோட்டாவை சிறு துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.
முட்டையை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்தக் கலவையை கடாயில் ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, நடுவில் முட்டையை ஊற்றிக் கிளறவும்.
முட்டை நன்கு பொரிந்த பிறகு, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறி, துண்டுகளாக உதிர்த்து வைத்துள்ள பரோட்டாவைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் சால்னாவை ஊற்றி, நன்கு வதக்கி பரோட்டாவுடன் மசாலா சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஈஸி & டேஸ்டி கொத்து பரோட்டா ரெடி.

சால்னா இல்லையென்றால் கிரேவி அல்லது குருமா உபயோகிக்கலாம். கிரேவி சேர்ப்பதாக இருந்தால் ஒரு கரண்டி அளவு சேர்த்தால் போதுமானது.

ஆறிய பிறகு முட்டையின் வாசனை வரக்கூடாது என்பதால் தான், தனியாக ஒதுக்கி முட்டையை கிளறும்படி குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு செய்து பழக்கமில்லாதவர்கள், முட்டையைத் தனியாகப் பொரித்தெடுத்து சேர்க்கலாம். காரம் தேவைப்பட்டால் கடைசியாக மிளகுத் தூள் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை கொடுத்த‌ திருமதி. ஆமினா அவர்களுக்கும் அதை வெளியிட்ட‌ டீமிற்க்கும் எனது நன்றிகள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கொத்து பரோட்டா செய்முறை ரொம்ப ஈஸியா இருக்குங்க , பார்க்கவும் நல்லாருக்கு. நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

உங்க‌ பதிவுக்கு எனது நன்றிகள். ஆமாங்க‌ செய்வது ரொம்பவும் சுலபம், செய்த‌ உடனே காலியும் ஆகிடும்..:) ட்ரை செய்துட்டு சொல்லுங்க‌..
உங்க‌ பெயர் ஷீலா வா?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆமாங்க ஷீலா தான் என் பெயர்.

உங்களோட எல்லா குறிப்பும் நல்லா வந்திருக்கு, குஜராத்தி சீஸ் போண்டா பார்க்கிறதுகே ரொம்ப நல்லாருக்கு

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela