வெண்ணெய் சிக்கன் மசாலா

தேதி: January 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் வெண்ணெய் சிக்கன் மசாலா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழி - ஒரு கிலோ
கெட்டித்தயிர் - ஒரு கப்
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 4
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு புட் கலர் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - அரை மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால்)
முந்திரி பருப்பு - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம் (விருப்பப்பட்டால்)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனுடன் தயிர், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கொதிக்கும் நீரில் தக்காளி மற்றும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும்.
கொதிக்கு நீரில் இருந்து தக்காளியை எடுத்து தோல் நீக்கி வெங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் தக்காளி சாஸ், ஃபுட் கலர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
மற்றொரு வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கி, அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரியும் சமயத்தில் பொரித்த கோழியை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் வறுத்த முந்திரியைச் சேர்க்கவும்.
சுவையான கமகமக்கும் வெண்ணெய் சிக்கன் மசாலா ரெடி.

விருப்பமுள்ளவர்கள் இறுதியில் சர்க்கரை, உலர்ந்த திராட்சை சேர்க்கலாம். மசாலா சேர்க்காத புலவு வகைகளுக்கு இந்த மசாலா சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை டீமிற்க்கு எனது நன்றிகள். குறிப்பை கொடுத்த‌ திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்முறை சூப்பர்.. வாழ்த்துக்கள் கிச்சன் குயின். எண்ணையில் பொரித்ததே சாப்பிட‌ தூண்டுகிறது.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் வாழ்த்துக்கும் பதிவுக்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....