கேப்ஸிகம் ரைஸ்

தேதி: January 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. கீதா ஆச்சல் அவர்களின் கேப்ஸிகம் ரைஸ் குறிப்பைப் பார்த்து, திருமதி. தர்ஷா அவர்கள் விளக்கப்படங்களுடன் செய்து பார்த்த குறிப்பு இது.

 

குடைமிளகாய் - 2
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
எண்ணெய் (அல்லது) நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

குடைமிளகாயை விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை 2 டம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு நன்றாக வறுத்தெடுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு சற்று கொரக்கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
குடைமிளகாய் பாதி வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பிறகு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
சூடாகப் பரிமாற, சுவையான கேப்ஸிகம் ரைஸ் ரெடி. சிப்ஸ் அல்லது ஏதேனும் வறுவலுடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் சிம்பிள் ரைஸ். சூப்பரா இருக்கு

Be simple be sample

கேப்ஸிகம் ரைஸ் கலர்புல்லா அழகா இருக்கு. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் போல‌. வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றி ரேவதி.

நன்றி சுமி. டேஸ்ட் சூப்பரா இருந்தது. செய்வதும் ஈசி. குறிப்பு கொடுத்த கீதா ஆச்சல் அவர்களுக்கும் நன்றி.

கலர்புல் டிஷ். கடைசி படம் சூப்பர் :-)