சிம்பிள் சிக்கன் சாண்ட்விச்

தேதி: January 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

ப்ரெட் ஸ்லைஸஸ் - 4
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
வேக வைத்த சிக்கன் - 3 - 4 துண்டுகள்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - தேவைக்கேற்ப (விரும்பினால்)
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்து எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
பிறகு ஒரு ப்ரெட் துண்டின் மீது பட்டர் தடவி, சிக்கன் கலவையை வைக்கவும்.
அதனை மற்றொரு ப்ரெட்டினால் மூடி டோஸ்ட் செய்து எடுக்கவும்.
ஈஸி & டேஸ்டி சிக்கன் சாண்ட்விச் ரெடி.

இந்த சாண்ட்விச்சை சிக்கன் குழம்பிலுள்ள சிக்கன் துண்டுகள் அல்லது மீந்து போன சிக்கன் வறுவலை எலும்பு நீக்கி செய்தால் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல எளிமையான குறிப்பு . சூப்பரா இருக்கு

Be simple be sample

சிக்கன் சாண்ட்விச் சூப்பர்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....