face

mugathil karum pulligal ullathu.parukkalum ullathu.ithai eppadi sari seivathu?

டியர் குமாரி, முகத்தில் கருப்புள்ளிகளை அகற்ற வீட்டிலேயும் செய்யலாம். பியூட்டி பார்லரிலும் சென்று அகற்றி விடலாம். வீட்டில் செய்ய வேண்டும் என்றால் முகத்தை நன்கு சுத்தம் செய்து விட்டு ஏதாவது ஒரு எண்ணெயைக் கொண்டு நன்கு மாசாஜ் செய்யவும். பிறகு முகத்தை சுடுநீரில் ஆவி பிடிக்கவும்.இதற்க்கென்று கடைகளில் ஃபேஷியல் ஸ்டீமர் என்ற சாதனக் கிடைக்கின்றது. அதைக் கொண்டு முகத்தை ஆவியில் காட்டுவதால் கரும்புள்ளிகள் இளகிவிடும்.பிறகு ஏதாவது ஒரு நாணயத்தைக் கொண்டு கரும்புள்ளிகளின் பக்கவாட்டில் வைத்து அழுத்தினால் வெளியில் வந்து விடும்.இதைப் போலவே முகம் முழுவதும் செய்யவும்.ஒரே நாளில் முழுவதும் எடுக்க முடியாது. ஆகவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இதே முறையில் செயலாம். மேலும் கடைகளில் இந்த கரும்புள்ளிகளை அகற்ற பட்டிகள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகித்தும் அகற்றலாம்.நீங்கள் இதுவ்ரையில் கரும்புள்ளிகளை அகற்றியதில்லை என்றால் அழகு நிலையத்திர்க்கு சென்று முறையாக இந்த சிகிச்சையை செய்தப் பிறகு மீண்டும் ஏற்பட்டால் வேண்டுமானால் விட்டிலேயே செய்துக் கொள்ளலாம்.
முகப்பருக்களை அகற்ற ஒரு துண்டு எலுமிச்சம்பழத்தின் சாற்றை பருக்களின் மீது படும்படியாக பிழிந்து விட்டு பழத்தை முகம் முழுவதும் தேய்த்து விடவேண்டும். சிறிது நேரம் ஊறவைத்த பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும்.பருக்கள் நீங்கும் வரையில் தினமும் இவ்வாறு செய்யவும்.முகத்தை கூடுமான வரையில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சோப்பிற்க்கு பதில் எப்பொழுதும் கடலைமாவு அல்லது சிறு பருப்பு மாவு உபயோகித்து முகத்தை கழுவிகொண்டால் நல்லது.நன்றி.

thankyou madam,
seithu parkirean.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்