மீன் குழம்பு

தேதி: January 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. மனோகரி அவர்களின் மீன் குழம்பு குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரை கப்
வெங்காயம் - ஒன்றரை
பச்சை மிளகாய் - 4
தக்காளி - ஒன்று
பூண்டு - 6 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
உப்பு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்


 

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து, அத்துடன் தக்காளியைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பாதி வெங்காயத்தை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை நசுக்கி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நசுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு தூள் வகைகளைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு புளிக் கரைசலை ஊற்றி, மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியான பதம் வந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் நேற்று வைத்த மீன் குழம்பு நெஞ்சை இழுக்குதடி.. நெஞ்சிக்குள்ள அந்த நினைப்பு வந்து இழுக்குதடி.. சூப்பர் ரேவா.. வாசனை இங்கே வரைக்கு வீசுது..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மீன் குழம்பு செய்முறையும், படங்களும் அருமை... அடுத்த‌ முறை இதே மாதிரி தான் செய்ய‌ போறேன்,,

"எல்லாம் நன்மைக்கே"