பாவ்பாஜி மசாலா

தேதி: January 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சந்தோஷி ஸ்ரீராம் அவர்களின் பாவ்பாஜி மசாலா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சந்தோஷி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 2
சிறிய கேரட் - ஒன்று
பீன்ஸ் - 6 அல்லது 7
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பன்
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
மாங்காய்ப் பொடி (அ) எலுமிச்சை - அரைத் தேக்கரண்டி (அ) ஒன்று
கடுகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பாவ்பாஜி மசாலா - தேவையான அளவு


 

கேரட் மற்றும் பீன்ஸை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, கோஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
பன்னை இரண்டாக நறுக்கி வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் வேக வைத்து எடுத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் சிறிது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, உலர்ந்த மாங்காய்ப் பொடி ஆகியவற்றைத் தூவி நன்கு வதக்கவும். விரும்பினால் சிறிது கரம் மசாலாப் பொடியும் தூவலாம்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு வதங்கி, கெட்டியான குழம்பு பதத்திற்கு வந்தவுடன் பன்னுடன் சேர்த்துப் பரிமாறவும்.

பாவ் என்றால் பன் என்று பொருள். பாஜியில் சிறிது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதினையும் சேர்த்து வதக்கினால் சுவை இன்னும் கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயின் ரேவாவிற்கு வாழ்த்துகள்.. சூப்பர் ரேவா அனைத்து குறிப்புகளும் சூப்பர். நல்லா செய்திருக்கீங்க.. வாழ்த்துகள் ரேவா..

பாவ் பாஜி எனக்கு ரொம்ப பிடிக்கும்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மீண்டும். கிச்சன் குயினாக தேர்ந்தெடுத்து குறிப்புகளை அழகாக வெளியிட்ட டீம் &அட்மின் அண்ணா நன்றீ

Be simple be sample

முதல் வாழ்த்திற்கு தான்க்ஸ் ரேவ் . எனக்கும் பாவ்பாஜி ரொம்ப பிடிக்கும் ரேவ்.உங்களுக்குமா

Be simple be sample

பாவ் பாஜி மசாலா நல்லா வந்திருக்கு ரேவ்... வாழத்துகள் கிச்சன் குயின்...

"எல்லாம் நன்மைக்கே"

Packia thanku

Be simple be sample