மலாய் குல்பி

தேதி: January 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயப்ராகாஷ் அவர்களின் மலாய் குல்பி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.

 

பால் - ஒரு லிட்டர்
கார்ன் ஃப்ளார் - 50 கிராம்
சர்க்கரை - ஒரு கப்
க்ரீம் - ஒரு கப்
ரோஸ் எசன்ஸ் - 6 துளி
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - 2 மேசைக்கரண்டி


 

முந்திரி, பாதாம், பிஸ்தா மூன்றையும் பொடியாக துருவிக் கொள்ளவும்.
சர்க்கரையை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
க்ரீமை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். அதில் பாதியளவு பாலை எடுத்து கார்ன் ஃப்ளார் சேர்த்து கெட்டியாக கலந்து வைக்கவும். மற்றொரு பாதியில் சர்க்கரை சேர்க்கவும்.
மிக்ஸியில் இந்த இரண்டு பால் கலவையையும் ஊற்றி அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் க்ரீம், எசன்ஸ், ஏலக்காய் தூள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கலந்துக் கொள்ளவும்.
இந்த பால் கலவையை குல்பி மோல்டில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும்.
கெட்டியானதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயின் ரேவ் வாழ்த்துக்கள். எனக்கு குல்ஃபி . சீக்கிரம் செய்து பார்க்கணும்.

Be simple be sample

வாழ்த்துக்கள் :) எப்போ பார்த்த குல்பி இப்ப தான் வந்திருக்கு!!! முகப்பையே கலர்ஃபுல் ஆக்கி இருக்கு உங்க குல்பி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிச்சன்குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குல்பி அருமையா இருக்கு. குறிப்புகளும் படங்களும் சூப்பர்.வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரேவ் சூப்பர் குல்பி பார்க்கவே ஜம்முன்னு இருக்கு நல்லா வெயில் காலம் வரட்டும் செய்துடுவோம் :) மீண்டும் கிச்சன் குயின் பட்டம் முகப்பில் கலக்கலான குறிப்புகள் சூப்பர் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.