தேங்காய்ப் பால் அல்வா

தேதி: January 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சசிகலா அவர்களின் தேங்காய் பால் அல்வா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சசிகலா அவர்களுக்கு நன்றிகள்.

 

தேங்காய் - ஒன்று
பச்சரிசி - ஒரு கப்
சீனி - ஒரு கப்


 

தேங்காயைத் துருவி இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த பச்சரிசி மாவைத் தேங்காய் பாலுடன் சேர்த்துக் கலந்து, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
கட்டிகளாகிவிடாதபடி தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து நிறம் மாறியதும், அதனுடன் சீனியைச் சேர்த்துக் கிளறவும்.
நன்றாக வெந்து திரண்டு பால்கோவா பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.
பிறகு தட்டில் கொட்டி விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். சுவையான தேங்காய்ப் பால் அல்வா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரான எளிமையான பொருளில் அல்வா அருமையா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

படத்தைப் பார்க்க தொதோல் மாதிரி இருக்கு. :-)

‍- இமா க்றிஸ்

ஆசையா இருக்கு எடுத்து சாப்பிட. . சீக்கிரம் செய்துடறேன். சூப்பர்

Be simple be sample

சூப்பரா இருக்கு எல்லாமே. வாழ்த்துக்கள். படங்கள் எல்லாமே அருமை.

எல்லாம் சில‌ காலம்.....

ஈசியாகவும் செய்யலாம்..

எனக்கும் அதே சந்தேகம் இருந்தது தொதோல் தானோ என்று.அதுக்கு சக்கரை சேர்த்து செய்யனும் என்று அம்மா சொன்னா..

சாப்பிடுங்க..செய்து பார்த்து சொல்லுங்க..

ரொம்ப நன்றி..

assalamu alaikkum Tharsha,
recipe super...thengaipal halwa ku nangal maida maavu use panrom. maida maavu try panni parunga migavum nantaga irukkum..

எங்கட பக்கம் சீனிதான் போடுறனாங்க தர்ஷா. ஆனால் கனக்க தேங்காய்ப்பால், சவ்வரிசி, ரவை, வறுத்த பயறு, கஜு எல்லாம் போடுவம். டெக்க்ஷர் வித்தியாசமா இருக்கும். மாமியும் க்றிஸ்ஸுமா பெரிய தாச்சி வைச்சுக் கிண்டுவினம். மூன்று மூன்றரை மணித்தியாலம் எடுக்கும் வேலை முடிய. ஊரை விட்டு வந்த பிறகு அந்த சுவையோட தொதோல் எங்கயும் சாப்பிடக் கிடைக்கேல்ல. ;( இங்கயும் அப்பிடி அடுப்பு வைச்சுக் கிண்டுற மாதிரி வசதி இல்லை. ;(

‍- இமா க்றிஸ்