பெங்காலி ஷர்ஷூ ஃபிஷ்

தேதி: January 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் பெங்காலி ஷர்ஷூ பிஸ் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் துண்டுகள் - 10 (முள்ளில்லாத சதை பகுதி மட்டும்)
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கடுகு பவுடர் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


 

கடலை மாவுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதில் மீன் துண்டுகளைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஊற வைத்த மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து (டீப் ஃப்ரை) எடுக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து கடுகு பவுடர், மீதமுள்ள மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு உப்பு மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து அரை டம்ளர் தன்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் (செமி கிரேவியானதும்), பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கி விடவும். (மீன் துண்டுகள் உடைந்துவிடாதபடி கிளறவும்).
சுவையான பெங்காலி ஷர்ஷூ ஃபிஷ் ரெடி.

சாதாரணமான மீன்களையும் இம்முறையில் சமைக்கலாம். முள் நீக்கிச் செய்தால் சாப்பிட சிரமம் இல்லாமலும், குழந்தைகளுக்கு கொடுக்க எளிதாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிச்சன் குயின், தர்ஷாவின் படங்களும், நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அனைத்து குறிப்புகளும் அருமையோ அருமை.
செய்து காட்டியிருக்கும் விதம் மிக நேர்த்தி.
பாராட்டுகள் :-)
இந்த மீன் கறியில் கடுகு பொடிக்குப் பதில் மஸ்டட் சாஸ் பயன் படுத்தலாம் தானே.
அவசியம் செய்துப் பார்க்கிறேன் தர்ஷா.

வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.மஸ்டட் சாஸ் பயன்படுத்தி செய்து பாருங்க.