சீரகக் குழம்பு

தேதி: January 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் சீரகக் குழம்பு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - 4 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
புளிக் கரைசல் - கால் கப்
நறுக்கிய வெங்காயம் - பாதி
நறுக்கிய தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், தோலுரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம், குழம்பு நீர்க்க இருக்கும்). தூள் வாசம் போகக் கொதித்ததும், புளிக் கரைசல் சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்போது இறக்கி விடவும்.
சுவையான சீரகக் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் தர்ஷா. எல்லாமே கலக்கலா அருமையா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..