கீரை தயிர் கறி

தேதி: January 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வசந்தா அவர்களின் கீரை தயிர் கறி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வசந்தா அவர்களுக்கு நன்றிகள்.

 

கீரை - ஒரு கட்டு
தயிர் - ஒரு கப்
கிராம்பு - 3
பூண்டு - 3 பல்
மிளகாய் வற்றல் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
வெந்தயம் - சிறிது
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி


 

ஏதேனும் ஒரு வகைக் கீரையைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சிவக்க வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வதங்கியதும் கீரையைச் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
பிறகு அதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான கீரை தயிர் கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்