முட்டை சந்தவை

தேதி: January 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சந்தவை
பெரிய‌ வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் ‍- 2
காய்ந்த மிளகாய் ‍- 2
முட்டை ‍- 2
மஞ்சள் தூள் ‍ - சிறிது
உப்பு - தேவையான‌ அளவு
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க‌


 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாயை நீளமாக‌ நறுக்கி வைக்கவும்.
சந்தவையைத் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் முட்டையைச் சேர்த்து, நன்கு உதிரியாகும் வரை வதக்கி, சந்தவையைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சூடாக‌ப் பரிமாற, சுவையான முட்டை சந்தவை தயார்.

<a href="/tamil/node/28279"> இனிப்பு சந்தவை </a> குறிப்பில் உள்ளபடி சந்தவையைத் தயார் செய்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் முட்டை சாதம் இது மாதிரி செய்வேன். இதுவும் நல்ல‌ ஐடியா. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

சந்தவை கலர்ஃபுல்லா இருக்கு சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல‌ குறிப்புங்க‌! வாழ்த்துக்கள்....

எலுமிச்சை, தக்காளி மாதிரி முட்டையிலும் பண்ணலாமா?? சூப்பர் பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி & டேஸ்ட்டி குறிப்பு :) இடியாப்பத்திலும் இது போன்று செய்யலாம்தானே பிரியா,