மசாலா மொச்சை

தேதி: January 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. சரஸ்வதி அவர்களின் மசாலா மொச்சை என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மொச்சை - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10 அல்லது பெரிய வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடலை மாவு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மொச்சையாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மொச்சையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த மொச்சையை தண்ணீரை வடித்து விட்டு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கடலை மாவு போட்டு ஒரு துளி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பச்சை வாசனை அடங்கியதும் பிசறி வைத்திருக்கும் மொச்சையை சேர்த்து கிளறி, சிறிது நேரம் மூடி வைத்து வேக விட்டு 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
சுவையான மசாலா மொச்சை ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்ல ஹெல்த்தி டிஷ் , போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு. இது மாலை நேர சிற்றுண்டி யா

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

சம சூப்பர். எங்க அம்மா ஒரு வகையா செய்வாங்க, சின்ன சின்னதா தேங்காய் எல்லாம் போட்டு. ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன். மறுபடி மறூபடி கிச்சன் குயின் ஆகுறீங்க... மகள் சம ஹேப்பியா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மசாலா மொச்சை செம்ம டேஷ்ட்டியா இருக்கும் போலருக்கே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.//இது மாலை நேர சிற்றுண்டி யா// சிற்றுண்டி மட்டும் அல்ல‌, தயிர் சாதம், கலந்த‌ சாதங்களுக்கு நல்ல‌ காம்பினேஷன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//சம சூப்பர். எங்க அம்மா ஒரு வகையா செய்வாங்க, சின்ன சின்னதா தேங்காய் எல்லாம் போட்டு// அம்மாவோட‌ சமையல் டேஸ்ட் எல்லாம் யாராலேயும் அடிச்சுக்க‌ முடியாது வனி.
// ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.// தயிர் சாதத்தை விட்டுட்டீங்களே வனி..;)
//மறுபடி மறூபடி கிச்சன் குயின் ஆகுறீங்க... மகள் சம ஹேப்பியா?? ;)// வர்ஷா ஹேப்பி அண்ணாச்சி..;) ..:)
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் வனி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//மசாலா மொச்சை செம்ம டேஷ்ட்டியா இருக்கும் போலருக்கே.// ஆமா சுவா. செய்யறதும் ஈசியா இருந்தது. நன்றி சுவா..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறீப்பினைக் கொடுத்த‌ திருமதி. சரஸ்வதி அவர்களுக்கும், சூப்பரா எடிட் செய்து வெளியிட்ட‌ குழுவுக்கும் எந்து நன்றீகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மசாலா மொச்சை ரொம்ப‌ நல்லா இருக்கு. மீண்டும் கிச்சன் குயின் பட்டம்.வாழ்த்துக்கள் சுமி.

அன்புடன்
பாரதி வெங்கட்

பதிவுக்கு எனது நன்றிகள் பாரதி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....