தயிர் குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 30528 | அறுசுவை


தயிர் குழம்பு

வழங்கியவர் : sumibabu
தேதி : திங்கள், 26/01/2015 - 09:40
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.666665
3 votes
Your rating: None

திருமதி. லாவண்யா அவர்களின் தயிர் குழம்பு என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

  • தயிர் - ஒரு கப்
  • கேரட் (அ) பீட்ரூட் - ஒன்று
  • உப்பு - தேவையான அளவு
  • சீரகம் - கால் தேக்கரண்டி
  • மிளகு - கால் தேக்கரண்டி
  • பூண்டு - 2 பற்கள்
  • பச்சை மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - 2
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பீட்டரால் தயிரைக் கட்டிகளில்லாமல் நன்கு அடித்துக் கொள்ளவும்.

கேரட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை ஒன்றும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்.

அதனுடன் கேரட் துருவல் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

கேரட் நன்கு வதங்கியதும், இடித்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

வதக்கியவற்றை அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சுவையான தயிர் குழம்பு தயார். தக்காளி சாதம், புலாவ் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..சுமி

மீண்டும் மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெறும் தோழி சுமிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) தயிர் குழம்பு சூப்பரா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீண்டும் கிச்சன் குயின்

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெறும் சுமிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

சுவா..

ரொம்ப‌ நன்றி சுவா. உங்களைப் போன்ற‌ தோழிகளின் ஊக்கம் தான் கரணம் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நிஷா.

உங்கள் ப‌திவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

லாவ்ஸ் அன்ட் டீம்

குறிப்பினை கொடுத்த‌ லாவண்யாவிற்க்கும், வெளியிட்ட‌ டீமிற்க்கும் எனது நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

sumi

சூப்பரா இருக்கு தயிர் குழ்ம்பு. செய்து பார்க்கிறேன். எல்லா குறிப்பும் சூப்பர் வாழ்த்துக்கள்.

தர்ஷா..

உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....