ராமேஸ்வரம் சட்னி

தேதி: January 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மாலதி அவர்களின் ராமேஸ்வரம் சட்னி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மாலதி அவர்களுக்கு நன்றிகள்.

 

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தேங்காய் - ஒரு மூடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பருப்பு வகைகள் சிவந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
அரைத்த சட்னியை தாளித்தவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கவும், கெட்டியானதும் இறக்கவும்.
இந்த சட்னி இட்லி, தோசையுடனும், கலந்த சாத வகைகளுடனும் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான‌ சட்னி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு என்ன‌ செய்வது என்று பிறகு சொல்லவேயில்லையே?

S.PALANI

Information is wealth

சட்னி கலக்கல்.. புளி சேர்த்து அரைக்க‌ சொல்லவே இல்ல‌..
இன்னிக்கு இட்லிக்கு செய்திடுவோம்.. நன்றி ரேவ்..

"எல்லாம் நன்மைக்கே"

கிக்கிகிகி கும்பகோணத்துல கூட இப்படித்தான் அரைப்போம்ங்கோ ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பழனி புளி எல்லாம் சேர்த்து அரைக்கும்போது சேர்த்துகணும்.தான்க்யூ.

பாக்யா ஹி ஹி ஹி அரைக்கும்போது சேர்த்துகணும். அரைச்சுட்டியா நைட்டுக்கு.

சுவா மெய்யாலுமா உங்க ஊர் ஸ்பெஷலோ. நல்ல டேஸ்ட். தான்க்ஸ் சுவா

Be simple be sample