வடைக் குழம்பு

தேதி: January 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. முத்துமாரி அவர்களின் வடை குழம்பு என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துமாரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மசால் வடை (பருப்பு வடை) - 4
தக்காளி - 2
வெங்காயம் - 3
தேங்காய் - ஒரு சில்லு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது


 

வெங்காயம், தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வடைகளை தயாராக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, தேங்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
அரைத்த விழுதுடன் உப்பு, மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கரைத்து வைத்திருக்கும் குழம்பு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதி வந்ததும் வடைகளை போட்டு மேலும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான வடைக் குழம்பு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய சமையல் ராணி ரேவாவிற்கு என் வாழ்த்துகள்.. அனைத்து குறிப்புகளும் டக்கரா கீதும்மா.. ஏம்மா எப்படி இப்புடி கலச்சலா பண்ற.. கெத்தும்மா.. ;)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மீண்டும் கிச்சன் குயின் பகுதிக்கு தேர்ந்தெடுத்த அட்மின் அண்ணா &டீம் மிக்க நன்றி

Be simple be sample

ஹாய் ரேவ். தான்க்ஸ்ப்பா. சோக்கா பேசறிங்க சென்னை தமிழ் .

Be simple be sample

இன்றைய சமையல் ராணி ரேவாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவதி,
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள் கிச்சன் குயின்..
மேலும் அசத்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா