பானி பூரி

தேதி: January 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திரு. நவீன் அவர்களின் பானி பூரி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நவீன் அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா மாவு - 100 கிராம்
ரவை - 50 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் வற்றல் - 6
வெல்லம் - 10 கிராம்
உருளைக்கிழங்கு - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
புதினா - சிறிது
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் மாவை ஒரளவு பெரிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக தேய்க்கவும். பானி பூரி மிகவும் சிறியதாகவும் ஒரே அளவுடனும் இருப்பது அவசியம். இதற்கு ஏதாவது கூராகவுள்ள மூடியை வைத்து அப்பளத்தின் மீது அழுத்திச் சிறு பூரிகளாக செய்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பூரி நன்றாக உப்பி வரும். அதனை எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும்.
மிளகாய் வற்றல், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.
புளிக்கரைசலில் மசாலா பொடி, புதினாவை அரைத்து அதன் சாறு எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து பின்னர் புளித்தண்ணீரை ஊற்றி மூன்றையும் சேர்த்துச் சாப்பிடவும். மிகவும் சுவையான இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பானி பூரி என்னோட‌ பேவரைட். கடைசி ப்லேட் ரொம்ப‌ அழகு.கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

கலக்கலான ரெசிபி சூப்பர் ரே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு ரொம்ப‌ பிடிச்ச‌ பானி பூரி! நாக்குல‌ நீர் ஊரவைக்குது உங்களோட‌ படங்கள்!
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்!!