தேதி: January 29, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பிந்து அவர்கள் வழங்கியுள்ள முட்டை சாண்ட்விட்ச் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பிந்து அவர்களுக்கு நன்றிகள்.
வேக வைத்த முட்டை - ஒன்று
ப்ரெட் - 8 ஸ்லைஸ்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த முட்டையை தேங்காயை துருவுவது போல் துருவி எடுக்கவும். அதனுடன் வெண்ணெய், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

ப்ரெட்டின் ஒரத்தை நீக்கி விட்டு நடுவில் முட்டை கலவையை வைக்கவும். அதன் மேல் மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும்.

இதைப் போல் மற்றொரு ப்ரெட்டிலும் செய்து டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும். அல்லது தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு இரண்டு பக்கங்களும் சிவக்கும் படி வாட்டி எடுக்கவும்.

எளிதில் செய்து விடக்கூடிய காலை நேர சிற்றுண்டி தயார். இது ஒரு இத்தாலியன் ரெசிபி.

Comments
முட்டை சாண்ட்விட்ச்
ஈசி அண்ட் டேஸ்டி சாண்ட்விச். படம் பளிச் பளிச்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவதி
எல்லா குறிப்பையும் விட இந்த குறிப்போட படம் என்னை இங்க கொண்டு வந்துட்டுது ;) சூப்பர். அடிக்கடி மகுடம் சூடி கலக்கறீங்க... மகிழ்ச்சியா இருக்கு ரேவதி. கிச்சன் குயினின் எந்த பகுதியும் விட்டதில்லை இதுவரை :) இது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சாண்ட்விச்
சத்தான சுவையான குறிப்பு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
இந்த குறிப்போட படம் சூப்பர்.
இந்த குறிப்போட படம் சூப்பர். கிச்சன் குயினின் ஆதரவு மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
revathy.P
அக்கா முட்டை சாண்ட்விட்ச் சோ சோ டெம்ப்டிங்.. யம்மி :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ரேவதி,
ரேவதி,
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்
மேலும் மகுடம் சூட வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
very nice
very nice
கோபம் வரும் போது உன் முகத்தை கண்ணாடியில் பார் உனக்கே உன்னை பிடிக்காது