சைனீஸ் நூடுல்ஸ்

தேதி: January 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

அறுசுவையில் இஸ்லாமிய உணவுக் குறிப்புகள் வழங்கிவரும், ஃபிரான்ஸை சேர்ந்த <a href="experts/620" target="_blank"> திருமதி. ரஸியா </a> அவர்கள் வழங்கிய குறிப்பு. அவரது பக்கத்தில் ஏற்கனவே வெளியாகி உள்ள இந்தக் குறிப்பிற்கான செய்முறையை படங்களாக எடுத்து அனுப்பியுள்ளார். செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

 

அரிசி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (400 கிராம்)
இறால் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
செலரி (நறுக்கியது) - ஒரு கப்
கேரட் - ஒன்று
முளைக்கட்டிய பயறு - 200 கிராம்
வெங்காய தாள் பொடியாக நறுக்கியது - ஒரு மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
சன் ஃபிளவர் ஆயில் - 2 மேஜைக்கரண்டி
சைனீஸ் எள் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
அஜினோ-மோட்டோ - 1 சிட்டிகை


 

முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (காய்கறிகளை எப்பொழுதும் அரியும் முன்பே கழுவிக்கொள்ளவும். இதனால் அதன் சத்து வீணாகாது.)
பின்பு ஒரு பெரிய சட்டியில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும்.
3 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும்.
நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.
அதன்பிறகு ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவாவில் சன் ஃபிளவர் ஆயில் விட்டு, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அத்துடன் முளைக்கட்டிய பயறு, துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.
பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும்(நீர் சேர்க்கக்கூடாது).
காய்கள் அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.
கடைசியாக நறுக்கின வெங்காய இலை, எள் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான சைனீஸ் நூடுல்ஸ் தயார். ஃபிஷ் சாஸ் அல்லது டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஒர் சந்தேகம். இதற்கு உப்பு சேர்க்கவேண்டாமா?

இதற்க்கு உப்பு தேவையில்லை சோயா சாஸில் உப்பு இருக்கிறது,மேலும் ஃபிஷ் சாஸ் சேர்த்து சாப்பிடும்போது சரியாக இருக்கும்,ஃபிஷ் சாஸ் தயார் செய்யும் முறையையை விரைவில் எனது குறிப்பில் சேர்க்கிறேன்.நன்றி!

இத்தளத்தில் வரும் அனைத்து உணவு வகைகள் அனைவரின் சுவை நரம்புகளையும் மீட்டும் என்பதில் ஐயமில்லை.

நன்றி
இந்திரா

indira

செலரி என்றால் என்ன?

செலரி என்றால் ஒரு கீரை அதன் மணம் அலாதியானது,சாதாரண கீரைகளிறிந்து கொஞ்சம் சுவையில் மாறுபடும் கொஞ்சம் காரமாக இருப்பதுபோல், கிடைக்காதவர்கள் இன்னும் வேரு காய்கறிகளை சேர்க்கலாம்,பேபி கார்ன்,டொஃபு(tofou) ,காலான்,இந்த காய்கறிகள் இதற்க்கு பொருத்தமானவை .

நான் செய்து பார்தேன்.நன்றாக இருந்தது.நன்றி

sajuna

தாங்கள் செய்து பார்த்ததர்க்கு மிக்க நன்றி,உங்கள் பெயரை பார்க்கும் போது என்னுடய மகள் பெயர் நினைவில் வருகிறது,என் மகள் பெயர் சஜினா§

dear rasia mam,
what should i do to make it for veg . chinese noodles?.eagerly awaiting your reply. thankyou.

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்கள் பெயர் அழகாக இருக்கிறது,தாங்கள் எப்படி இந்த நூடுல்ஸை சைவமாக செய்வது என்று கேட்டுள்ளீற்கள்,சைவத்தில் செய்வதென்றால் எறாவுக்கு பதில் டோஃபு (tofu)சேர்த்துக்கொள்ளவேண்டும்,மேலும் டோஃபுவை ஸ்லைசாக வெட்டி சிறிது எண்ணைவிட்டு லேசாக பொரித்துவிட்டு எறா சேர்க்கும் இடத்தில் டோஃபுவை சேர்க்கவேண்டும்,மேலும் இதர்க்கு பேபி கார்ன்,மஸ்ரூம்,மூங்கில் தண்டு போன்ற காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம் மற்றபடி வேறு மாறுதல் இல்லை!வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,நன்றி!

நன்றீ, ஹெல்லொ எப்படி இருக்கறீங்க , என்கு டொffஉ கிடைகாது அதற்கு பதிலாக பின்ஸ்ஸ் , குடை மிளகாய் ,கோஸ், கரட், பயன் படுத்தலாமா.அதன் சுவை மாறுமா. தெளிவு செய்க.

நான் நன்றாக இருக்கிறேன்,நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! மேலும் தாங்கள் கூறிய காய்களை பயன் படுத்தியும் செய்யலாம்,ஆனால் காய்களின் அளவு அதிகரிக்கும்போது சோயா சாஸின் அளவையும் சிரிது கூட்டிக்கொள்ளுங்கள் தேவைப்பட்டால் தேவையான உப்பு சேர்க்கலாம்,உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்காவில் நம் இந்திய சமயலுக்கு ஏற்ற மளிகை பொருட்க்கள்,மற்றும் காய்கறீகள் கிடைக்கிறதா?

ஹாய் நாங்கள் நலம். இங்கு ஓரளவு பொருட்கள் கிடைகும்.மற்ற் நாடுகள் போல் இல்லை. ப்ரி க்குட் நுடுல்ஸ் என்ற் சைனிஸ் நுடுல்ஸ் கடையில் பார்த்தேன் .அது பயன் படுத்தலாமா இல்லை ரைஸ் நுடுல்ஸ் தான் நல்லா இருக்குமா

இதர்க்கு egg நூடுல்ஸும் நன்றாக இருக்கும்
அங்கு எல்லா பொருட்க்களும் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி இங்கும்(ஃபிரான்ஸ்)எல்லாம் கிடைக்கிறது.நன்றி

ரஸியா மேடம் நூடுல்ஸ் செய்தேன். நன்றாய் இருந்தது. செலரி,முங்கில் தண்டு போன்றவை இல்லாமல் தான் செய்தேன்.இதற்கு காரத்திற்கு மிளகாய் ,இஞ்சி,பூண்டு தேவை இல்லையா மேடம்.உங்கள் பதிலிற்காய் காத்திருக்கிறேன்.நன்றி.

றஸ்யா அக்கா சைனீஸ் ஆயில் இல்லாம சமைக்கலாமா? தேங்காய் எண்ணை உபயோகிக்கலாமா