pls.... help me நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பல

pls.... help me என் கணவருக்கு வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன food தயார் செய்து கொடுது அனுப்பலாம் only 2 months

thanks anu ... but எங்களுக்கு இடத்தோட பேர் மட்டும் தான் தெரியும் வேர எதுவும் தெரியாது(swindon ,uk)

என் கனவருக்கு அல்சர் இருக்கு சின்ன வயசுல இருந்தே hotel சாப்பாடு ஒடம்புக்கு சேராது..கல்யானத்துக்கு முன்னாடி இருந்து இப்படி தான். சின்ன வயசுல்ல tour போய் நாங்க சுத்தி பார்த்தா இவரு தலை வலி,மயக்கம் நு 4 நாள் படுத்துடுவார். அதான் பயமா இருக்கு.அவர் தான் சாப்பிட குடுத்துவிடு நு சொல்ரார்.

rice cooker mattum kuduthu vidalam nu paarkuren,thokku items

naanum innum 20 days pokalam nu irukken.monday visa apply pannalama

நிச்சயமா உங்களால 2 மாசம் x 3 வேளை சாப்பாடு கொடுத்து அனுப்ப முடியாது கண்ணா. அல்சர்... காரம் இல்லாத, எண்ணெய் சேர்க்காத உணவுகள் தாராளமாகக் கிடைக்கும் அங்கு. இந்தியாவை விட அங்கு நம்பகம் அதிகம். தொற்று பற்றிய பயமில்லாமல் சாப்பிடலாம்.

சப்பாத்தி போன்றவை... ஃப்ரோஸன் பாக்ஸ் கிடைக்கும். வாங்கி சுட வைத்து எடுக்கலாம். அல்லது... இன்னும் சுலபமான வேலை... அவங்களுக்கு ரொட்டி, சப்பாத்தி சுடப் பழக்கிக் கொடுங்க. சின்னச் சின்னச் சமையல்கள் தெரிந்திருந்தால் அவங்களே சமைத்துச் சாப்பிடுவாங்க. ஒருத்தருக்கு சாதம் போடுறதுல்லாம் சிரமம். எங்க தங்கப் போறாங்க? அங்க ஃப்ரிஜ் மைக்ரோவேவ் வசதிகள் அனேகம் கிடைக்கும். ஒரு தடவைலயே ஒரு மூன்று நாட்களுக்கு வருவது போல ப்ரிஜ்ல வைக்கலாம். பிறகு சுட வைச்சு சாப்பிடலாம். அங்க தெரிஞ்சவங்க இருந்தால் இந்திய, இலங்கைக் கடைகள் பற்றி விசாரிச்சுக்கச் சொல்லுங்க. முதல் வாரத்துக்கு நீங்கள் கொடுத்தனுப்புறது எதுவாக இருந்தாலும் போதுமாக இருக்கும். பிறகு சமைக்க ஆரம்பிக்கட்டும். பயத்துல சாப்பிடாம இருந்துரக் கூடாது. அதனாலும் உடம்பு கெட்டுப் போகும்ல! ஒன்றிரண்டு பாத்திரங்கள் மட்டும் வாங்கினால் போதும். அறுசுவைலயே பாச்சுலர்ஸ் சமையல் நிறைய இருக்கு என்று நினைவு. பாருங்க.

எங்க உடம்பு எப்பவும் ஒரே மாதிரி இருக்கிறது இல்ல. முன்னால சிரமப் பட்டாங்கன்னு இப்பவும் அப்படியே இருப்பாங்கன்னு இல்ல. இப்போ அவங்களால அட்ஜஸ்ட் பண்ணிக்க இயலுமாக இருக்கும். அனுபவத்துல சொல்றேன். நான் இப்படி இருந்திருக்கிறேன் சின்னதுல. எங்க சமையல்கள்தான் அல்சருக்கு பிரச்சினையா இருக்கும். வெஸ்டர்ன் சமையலுக்கு அல்சர் பிரச்சினை வராது. பயப்பட வேணாம்னு சொல்லுங்க.

வேலை விஷயமா... அப்பப்ப அங்கங்கே சாப்பிடுற நிலமை வரும். தவிர்க்கிறது சிரமம். போன பின்னால நான் சொல்றது இன்னதுன்னு புரிஞ்சுப்பீ(பா)ங்க. உடம்பு முடியாம போனா என்ன பண்ணுவாங்க இப்போ? அதுக்கு ஏற்ற மாதிரி மருந்துகளையும் கொஞ்சம் கையோட கொண்டு போய்ட்டா அவசரத்துக்கு உதவும். மருந்து கொண்டு போறதானா கூடவே அதற்கான ப்ரிஸ்க்ரிப்ஷனையும் கொண்டு போகணும்.

‍- இமா க்றிஸ்

thanks imma NORMAL MEDICINES Like ulcer tablet ,paracetamol இதுக்கு கூட‌ தேவையா

மேலும் சில பதிவுகள்