இக்கான் பக்கார் (bbq fish)

தேதி: January 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்கள் வழங்கியுள்ள இக்கான் பக்கார் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாறை அல்லது வவ்வா மீன் (pomfret) - ஒன்று
பழுத்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் - 5
தனியா - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் கிழங்கு (fresh turmeric) - ஒரு செ.மீ துண்டு (அ( மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

மிக்ஸியில் மிளகாய், வெங்காயம், மஞ்சள் (அ) மஞ்சள் தூள், தனியா ஆகியவற்றை போட்டு அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றுடன் உப்பு, எலுமிச்சை சாறு, சீனி கலந்து வைக்கவும். இக்கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் லேசாக கீறி விடவும் அரைத்த‌ கலவையை எண்ணெய் கலந்து மீனின் வயிற்று பகுதியிலும், ரெண்டு பக்கமும் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.
பார்பிக்யூவில் வைத்து மீனை சுட்டெடுக்கவும். பார்பிக்யூ அடுப்பு இல்லாதவர்கள் மண் பூந்தொட்டியில் முக்கால் பாகம் மணல் நிரப்பி அதன் மீது கரிகொட்டைகளை போட்டு தணல் ஏற்படுத்தி அதன் மீது இரும்பு வலை வைத்து மீனை சுடலாம். கரிக்கொட்டைகளை எரிக்க சமையல் எண்ணெய் பயன்படுத்தவும். OTG அவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.
இக்கான் பக்கார் (bbq fish) தயார். தனியாக‌ எடுத்து வைத்துள்ள அரைத்த‌ கலவையை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி டிப்பிங் சாஸாக வைத்து பரிமாறவும். விருப்பப்பட்டால் டிப்பிங் சாஸில் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இக்கான் பக்கார் வெகு அழகு. கடைசி ப்லேட் எனக்கு அனுப்பிடுங்க‌. வாழ்த்துக்கள் பாலா.

அன்புடன்
பாரதி வெங்கட்

வாழ்த்துக்கள் கிச்சன் குயின் . சூப்பரா இருக்கு பிஷ்.. செய்து பார்க்கிறேன் . எல்லா ரெசிபியும் கலக்கல்

Be simple be sample

கிட்சன் குயின் பட்டம் கொடுத்த‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி பாரதி. அட்ரஸ் குடுங்க‌. கொரியர்ல‌ அனுப்பிடறேன். ஆனா கெட்டு போனா நான் பொருப்பில்லை.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

இக்கான் பக்கார் (bbq fish) பெயர் சூப்பரா இருக்கே.. நீங்க செய்திருக்கும் விதமும் சூப்பரா இருக்கு பாலநாயகி.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றிகள் பல‌

எல்லாம் சில‌ காலம்.....