இறால் மசாலா கறி

தேதி: January 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜீவா மோகன் அவர்கள் வழங்கியுள்ள இறால் மசாலா கறி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜீவா அவர்களுக்கு நன்றிகள்.

 

இறால் - அரை கிலோ
எண்ணெய் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - ஒன்று
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்‍ ‍- ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

இறாலை தோல் நீக்கி, நன்கு கழுவிச் சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்குவதற்குள் தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். சீரகம், வெந்தயம், மிளகு அனைத்தையும் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் பொடியாக்கிக் தனியாக‌ வைக்கவும்.
பிறகு வதங்கிய‌ வெங்காய‌ கலவையில் இறால் சேர்த்து நன்கு கிளறி விடவும். இறாலுடன் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கிளறவும்.
இறால் கலவையில் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு பிரட்டவும்.
இறால் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கவும். இறால் மசாலா கறி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இறால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.படங்கள் அழகு.கண்டிப்பா ட்ரை பன்றேன்.

அன்புடன்
பாரதி வெங்கட்

கிட்சன் குயின் பட்டம் குடுத்த‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்பவே நல்லா இருந்துச்சி. செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....