முள்ளங்கி முட்டை புர்ஜி

தேதி: January 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

முள்ளங்கி - 2 (நடுத்தரமான அளவு)
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று (சிறியது)
பச்சை மிளகாய் - ஒன்று
சாம்பார் பொடி (மிளகாய் + மல்லி) - ஒன்றரை தேக்கரண்டி
முட்டை - 3
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய முள்ளங்கியைச் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி சற்று மிருதுவாகும் வரை வதக்கிவிட்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சிறிது நீர் விட்டு தூள் வாசம் போகக் கொதிக்கவிடவும். நீர் முற்றிலும் வற்றியதும், முட்டையை உடைத்து ஊற்றிக் கலந்து விடவும்.
முட்டை நன்றாக சுருண்டு வரும் வரை சிறு தீயில் வைத்து கிளறி இறக்கவும். சுவையான முள்ளங்கி முட்டை புர்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்