வேர்க்கடலை தேங்காய் பர்ஃபி

தேதி: January 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. கோமு அவர்களின் வேர்க்கடலை தேங்காய் பர்ஃபி குறிப்பினை பார்த்து தர்ஷா அவர்கள் விளக்கப்படங்களுடன் செய்து காண்பித்த குறிப்பு இது.

 

வேர்க்கடலை - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
சீனி - 200 கிராம்
வெண்ணெய் - சிறிது
கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3


 

வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.
தேங்காயைத் துருவி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.
வறுத்த கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடிக்கவும்.
ஒரு கடாயில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
சர்க்கரை கொதிக்க ஆரம்பித்ததும் கெட்டி பாகு பதம் வரும் பக்குவத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கலவை கெட்டியாக திரண்டு வரும் சமயம் கடலை மாவைத் தூவி கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது ஏலக்காய்ப்பொடி தூவி இறக்கி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி ஆறிய பின்பு துண்டுகள் போடவும் அல்லது படத்தில் உள்ளது போல் வெண்ணெய் தடவிய மோல்டில் ஊற்றி ஆறியதும் எடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை தேங்காய் பர்ஃபி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வேர்க்கடலை தேங்காய் பர்ஃபி சூப்பர்ங்க.. போட்டோஸ் கலக்கல்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் பர்ப்பி...ஈசியா இருக்கு. வாழ்த்துக்கள் தர்ஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நல்ல‌ அருமையான‌ ஸ்வீட்.....( 7 ஆவது படம்)ட்ரே வை யூஸ் செய்திருக்கும் விதம் அருமை!நல்ல‌ உபயோகமான் டிப்!

வாவ்!! தேங்காய் சுவையோட வேர்கடலை... காம்பினேஷன் சூப்பரு. மோல்ட் யூஸ் பண்ண ஐடியா ஜஸ்ட் வாவ்!! அவசியம் செய்துட்டு சொல்றேன், வழக்கம் போல படம்... பளிச்சுன்னு அழகா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் பர்பி...ஈசியா இருக்கு. வாழ்த்துக்கள் தர்ஷா.

பர்ஃபி ஸோஓ சுவீட் தர்சா. படங்கள் எல்லாம் மிகவும் அழகு. கடைசி படத்தில் ஒன்று மட்டும் வைத்திருக்கிறீர்கள் அதுவும் அழகா இருக்குது.( சிங்கம் சிங்கிளா வந்தாலும் செமயா இருக்கு)

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரொம்ப நன்றி ரேவதி..

வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி..

திருமதி. கோமுவின் குறிப்பு இது . குறிப்பு கொடுத்த அவங்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்..

சூப்பர் டேஸ்ட் .செய்து பாருங்க. வருகைக்கு என் நன்றிகள்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

ரொம்ப நன்றி மெர்சி..