இறால் வறுவல்

தேதி: January 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இறால் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும். பூண்டைத் தோலுரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
இறாலுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அத்துடன் பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு சின்ன வெங்காயத்தைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும். (விரும்பினால் சின்ன வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கலாம்).
பிறகு ஊற வைத்த இறாலைச் சேர்த்து மேலும் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும். வெந்ததை சரிபார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
விரைவாகவும், சுலபமாகவும் செய்யக் கூடிய இறால் வறுவல் தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கடைசி படம் நாக்கில் நீர் ஊறுது.. ஏழுமலையான் கண்ணை குத்திடுவார்.. சூப்பரா செய்திருக்கீங்க வாணி.. கலக்கல் ரெசிபி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இறால் வறுவல் சூப்பரா இருக்கு. பெரிய‌ வெங்காயம் சேர்த்தும் இப்படி செய்யலாம் தானே வாணி? படங்கள் ஜோரா இருக்கு. வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்களோட‌ ஒவ்வொரு குறிப்பின் படங்களையும் பார்க்கும்போது, உடனே ஒரு பார்சல்னு கேட்க்கத்தோனுது!!

வாணி லாஸ்ட் போட்டோ கலக்கல்.

Be simple be sample

படமும் குறிப்பும் சூப்பருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கள் ஊர் பக்கம், மிலகு பொடி, சோம்பு பொடி, சீரக்கபொடி, இஞ்சி சேர்ப்பார்கள். சூப்பராக இருக்கும்.