Please Advise

Dear Sister and Brothers,

Vanakkam,...

Nan Mahesh Post Graduate mudichutu Dubai la oru Hosptality Industry la Work Pannitu irukkean,Poor Family dhan ipo dhan Padi padiya munneri vantu irukkean,Nanum En Uravukara ponnum Last 3 Years a Love Panniturukom Engalkulla entha problem illa ma Nallabadiya poiturundhuchu,Enga veetla amma kum En Thai Mamanukum Therium,avanga veetla avanga akka ku therium,Engalkulla Nalla Understand oda Vazhndhom Andha Ponnu Engineering Padikuranga,Engita Romba Pasama Anboda Irundhanga Enta peasama irukkamatanga,Enga ponalum Sollitu dhan Poganum Avlo Close a irundhom Romba Nalla ponnu Thirumanam nu pannuna Avangaladhan Pannanum nu Nan Mudivu panni Dhan Veetla oralavukku Solli Vachean,Andha ponnuku Arambathuleandhea Christian La Konjam Arvama Irundhanga sari Nanum Normal a iru Romba Involve aga venam nu sollirundhean Ana Ipo Avanga Romba Involve Agitanga Enna Pathi Kavala Padradhe illa,Nan Pesna Kuda Chumma Kadamaiku Pesradhu nu irukkanga Last 6 Month ipdi dhan Irukanga Enakku Romba Kastama irukku Ennudaiya Work a Kuda Nimmadhiya Parkka Mudila Avlo Kasta Padrean,Ipo Love Panrathe Thappu Nu solra Alavukku Marirukkanga,Ana Kandippa Ungaladhan Kalyanam Pannuvean nu solranga adhu varaikkum Peasavenam apdinguranga Nanum Indha 6 month a evlo solli pathutean Avanga Marura mari theriyala,Nan Setahakuda Varamatiyanu keta Vara matean nu solranga,Ana Ennala Avangala marandhu tu Nimmadhiya irukka mudila,ana avnga irukkuranga,Idudhan kastama irukku,Avanga nenappu epothum enkitta irukku ana en Nenappu avangagita Konjam Kuda illa,So nan Enna Panrathu Please Advise me as aFamily Member...Thanks...Mahesh...

neenga familyalam vitu abroad la work pandreenga..so neenga safetya irukanum first..family members kuda iruntha periya support ah irukum athu ippa illandrapa neenga work la concentrate pannunga.ungaluku ethavathuna veetla ullavanga udane vanthu paka kuda mudiathu..antha ponna force pannatheenga..ungaluku aim vachikonga life la well settiled agunga..itha pathilam yosikatheenga ippa..just nadakrathu nadkatum..antha ponnu ungaluku thanu iruntha kandippa ungala thedi thana varuvangaa...all the best..

கவலைபடாதீங்க‌ மகேஷ். அவங்க‌ இப்படி இருப்பதற்கு கிறிஸ்டியன்ஸ்ட‌ உள்ள‌ பற்றுதான் காரணம்னு உங்களுக்கு நல்லா தெரியுமா? இல்ல‌ அவங்களுக்கு வேற‌ எதும் ப்ரச்சனையோ என்னவோ?

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வரேனு சொல்றீங்க‌. ஸோ இதையே நினைத்து கொண்ட்ருந்தால் உங்களால் மேலே போக‌ முடியாது. அவங்க‌ கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்றதுல‌ உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். பொறியியல் படிக்கிறாங்கனு சொல்றீங்க‌ அதனால‌ வெய்ட் பண்ணுங்க‌.

இல்லையென்றால் உங்க‌ ஃபேம்லி மெம்பர்ஸ பாருங்க‌. உடன்பிறந்தவர்கள், அப்பா, அம்மா உங்கள‌ நம்பி இருக்கலாமில்லயா?

நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Illa Mam Andha Ponnu Romba Nalla Ponnu,Nanum Yosichean Avanga Vera Yeadhavadhu Thappana vazhila Porangalo nu But Apdilam Yeadhum Illa Avngaloda Ennam Yeallam Christian La Patra Irukkanum Thappana Endha Visayamum Seiyya kudathu nu dhan.However Adhukaga Nambuna Ennayea Vittu Poganum nu edutha Mudivudhan Ennai Kayappduthi Kasta Paduthu thu.Ennudaiya Parents kaga Ithuvaraikum Nalla muraila Senji Pathukitu Varean Inium Avangala Pathupean Indha visayathala Manam Thalara Matean.Irundhalum Nan Nambi Yeamandhutano nu Kastamairukku...

Thanks Mam...

Nanum Neenga sonn mari than Mudiveduthurukean,Indha 3 year la Ipodhan 2 weeks Peasama irundhurukean avngalum Enakku peasla,Nanum ini disturb pannala avanga vazhila irukkattum..Neengala yosichu parunga mam Pudicha Ponnu Nan Kasta padum Podhu Kuda Illama Yeadho oralavukku settle ana piragu Pakkathula irundhu enna Payan...Adha avanga purinjuka matranga...Vithi padi Nadakkatum....

காதல் மனிதனை பாடாபடுத்தும் ;) அதுவும் கிட்ட இல்லன்னா கடுப்பேத்தும். சரி... இப்போ உங்க பிரெச்சனை என்ன? உங்கள் அன்புக்குறிய பெண் உங்களை தவிர்பதாக நினைக்கிறீர்களோ? அதுக்கு கிறிஸ்தவம் எந்த வகையில் காரணமாயிற்று?? வெளிநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் கிறிஸ்தவர்கள்? எனக்கு தெரிஞ்சு அங்க யாரும் பெற்றோர் பார்த்து திருமணம் செய்வதில்லையே!! அங்கு எல்லாம் காதல் திருமணம் தானே நடக்கிறது? எந்த மதமும் காதலை தவறென்று சொல்லவில்லையே? மதத்தை காரணம் காட்டி அவர்கள் உங்களை தவிர்கிறார்கள் என்றால் இதை சொல்லியே புரிய வைக்கலாம். வேறு காரணம் என்றால், கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. ஆனால் உங்களை தான் திருமணம் செய்வேன் என்றும் சொன்னதாக சொல்கிறீர்கள்!! ம்ம்... உங்களை விட இப்ப நாங்க தான் அந்த பெண்ணை நினைத்து அதிகம் குழபி இருக்கிறோம் ;)

எது எப்படியோ... ஒரு விஷயம் மனதில் வைக்க வேண்டும்... இப்போது நீங்கள் அவர்கள் அருகில் இல்லை, அதனால் என்ன நினைக்கிறார்கள், எதனால் இப்படி பேசுகிறார்கள், என்ன பிரெச்சனை இப்படி எல்லாம் குழப்பிக்காதீங்க... கிட்ட இருந்து நேரில் பார்த்து பேசும் போதே எதிரில் பேசுபவர்களின் மன நிலையை சரியாக புரிந்து கொள்வது சிரமம் :) அதுவும் காதலில் ரெம்ப சிரமம். அப்படி இருக்க... கண்ணுக்கு எட்டாமல் கடல் தாண்டி இருந்து கொண்டு தொலைப்பேசியில் பேசுவதை வைத்து இப்படி தான் பேசுகிறார் என்று முடிவுக்கு வருவது சரியாக எனக்குப்படவில்லை. போவது போல் வாழ்க்கை போகட்டுமே... இருக்கும் ஒவ்வொரு நாளையும் இது போன்ற சிந்தனைகளால் கஷ்டப்படுத்துவானேன்? நிம்மதியா நம்பிக்கையோட இருங்க... அன்பா பேசுங்க அவங்ககிட்ட, அவங்களை அவங்க போக்கில் விடுங்க... தானா சரியா போகும். காதல் என்பது நாம் நேசிப்பவரை அவரை அவராகவே ஏற்பது தானே? பீ ஹேப்பி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் அபிப்பிராயம்... அவங்களை அவங்க பாட்டுல விட்டுட்டு நீங்க உங்க வழியைப் பார்க்குறது நல்லது. //Nanum ini disturb pannala // அப்படியே அவங்க எண்ணமும் உங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கங்க. எனக்கு என்னவோ அவங்க உங்களைத் தவிர்க்கப் பார்க்கிறாங்களோ என்று தோணுது. அது கூட உங்கள் மேல் இருக்கும் பிரியத்தில், தன் மதமாற்ற முடிவு உங்களைப் பாதிக்காமலிருக்கட்டும் என்கிற நல்ல நோக்கில் இருக்கக் கூடும். தப்பு சொல்ல முடியாது இல்லையா!

எந்த விஷயமானாலும்.... ஒரு அளவோட இருக்கணும். சமயம் என்கிறது பாசத்துக்கோ காதலுக்கோ இடைல தடையாக வரக் கூடாது. ப்ளெக்ஸிபிளா இல்லாதவங்க கூட சாதாரண குடும்ப வாழ்க்கை... கொஞ்சம் சிரமம். பிறகு ஒரு காலம், நீங்களும் அவங்க வழியில போகணும் என்று எதிர்பார்த்தா என்ன பண்ணுவீங்க? உங்களால உங்க நம்பிக்கைகளுக்கு எதிராகப் போக முடியுமா? போகக் கூடிய ஆளாக இருந்தால் இங்கு இந்த இழை ஆரம்பிக்காமல் ஏற்கனவே போயிருப்பீங்க, எல்லாம் சுமுகமாகி இருக்கும். (அம்மா அப்பா சந்தோஷமா இருப்பாங்களான்னா, டவுட்டுதான்.)

உங்களிருவருக்கும் குடும்பம் குழந்தைகள் என்று ஆனதன் பின்னல் சிக்கல்கள் வரக் கூடாது. யோசிச்சுப் பாருங்க. இப்போ காதல் மட்டும்தான் தெரியும். காலப் போக்கில்தான் மீதி எல்லாம். பிறப்பால் இன்ன சமயம் என்று அப்படியே தொடருபவர்கள் வேறு. இடையில் மனம் மாறி வேறு மதத்தைப் பின்பற்ற ஆரம்பிப்பவர்கள் திரும்பிப் பார்ப்பது வெகு குறைவு. என்ன வந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிப் போக முடியும் என்று உங்களுக்குத் தோன்றினால் தவிர... இதைப் பற்றிச் சிந்திக்காமல் உங்கள் காரியத்தைப் பார்ப்பது நல்லது. நீங்க தப்பு பண்ணல. கில்டியா ஃபீல் பண்றதுக்கு எதுவும் இல்லை. ரிலாக்ஸ்டா இருங்க. அவங்களுக்குப் பிடிச்சா அவங்களா உங்க வழிக்கு வருவாங்க.

‍- இமா க்றிஸ்

/தன் மதமாற்ற முடிவு உங்களைப் பாதிக்காமலிருக்கட்டும்// - எனக்கும் அவங்க அப்படி முடிவு பண்ணிருக்காங்களோன்னு தான் சந்தேகம். அதான் //வேறு காரணம் என்றால், கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.// என்று சொன்னேன். அப்படி இருந்தா தொந்தரவு பண்ணாம நீங்க உங்க வழியை பார்ப்பது நல்லது. எது எப்படியோ மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க, சந்தோஷமா இருக்க பாருங்க. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கில்லையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Neenga solrathu Unmai than Sister Nan Avanga Kita Irukum Pothu Enna vittu Poga matanga Vacation Ponapo Kuda avlo Pasam a dhan irundhanga indha last 6 month lathan Ipdi Romba Kasta Paduthuranga..Avnga Ennadhan mudivu Panranga nu Pakkrean,Nan kandipa avangala disturb panna matean Yeapodhum pola Ennudaiya Vazhkaiyai Nagarthuginrean...

Thanks Mahesh

Nanum Avangala Poga venam nu sollala mam,alvoda irukkatum nu dhan solnean ana adhu enakkea abaththa mudinjuruchu....

எனக்கு தெரிந்து அவங்க‌ கிறித்தவ‌ மதத்தை பின்பற்றவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுகிறாங்க‌. இதுல‌ (கிறிஸ்துவை பின்பற்றுவதில்) அவங்க‌ உறுதியா இருந்தா அவங்க‌ இனி காதலில் ஈடுபட‌ மாட்டாங்க‌. உங்கள் மனம் வருந்தக்கூடாதுன்னுதான் அவங்க‌ நெனைக்கிறாங்க‌. உங்கள‌ ஏமாத்த‌ அவங்க‌ நினைக்கவில்லை.

நான் சொல்வது தவறெனில் மன்னிக்கவும்.

அன்புடன்
ஜெயா.

மேலும் சில பதிவுகள்