கத்தரிக்காய் குழம்பு

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் கத்தரிக்காய் குழம்பு குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 15 பற்கள்
தக்காளி - 2
புளி - சிறு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய்த் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு


 

கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து வைக்கவும்.
தக்காளியை அரைத்து வைக்கவும்.
அரை கப் தன்ணீரில் புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அரை பதமாக வதங்கியதும் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு தூள் வாசம் போகக் கொதிக்க விடவும். அதில் புளிக் கரைசலை ஊற்றி கொதித்ததும் தேங்காய் விழுதினை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் குழம்பு ரெடி..


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை தேர்வு செய்து விளப்படங்களுடன் கொடுத்தமைக்கு மிக்க நன்றி :) அருமையா இருக்கு எல்லா படங்களும். மீண்டும் மீண்டும் மகுடம்... அறுசுவை அழகாகிட்டே இருக்கு, தினமும். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த சுவையான குறிப்பை கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.வீட்டில் ரொம்ப பிடிச்சிருந்தது..பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றிகள்..