வெண்டைக்காய் பச்சடி

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா நிஸ்ரினா அவர்களின் வெண்டைக்காய் பச்சடி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.

 

வெண்டைக்காய் - 10
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தேங்காய் விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - சிறிது
சீனி - 2 தேக்கரண்டி


 

வெண்டைக்காயை கழுவி துடைத்து தலை மற்றும் வால் பகுதியை நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய வெண்டைக்காயை தலைப்பகுதியிலிருந்து நடுப்பகுதி வரை கீறி விட்டு எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து அரை கப் அளவிற்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலுடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் விழுது, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றவும்.
அதனுள் பொரித்த வெண்டைக்காயை போட்டு மூடி வேக விடவும்.
வெண்டைக்காய் சேர்த்த புளிக்கலவை வற்றியதும் இறுதியில் சீனியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
எல்லா மசாலாவும் சேர்ந்து பிரண்டு எண்ணெய் வெளிவரும் போது அடுப்பை அணைக்கவும்.
இதை பிரியாணி மற்றும் நெய் சாதத்துடன் பரிமாறவும்.

இதே முறையில் கத்தரிக்காயிலும் செய்யலாம். கத்தரிக்காயை நீளவாக்கில் வைத்து நீள் வட்டமாக நறுக்கவும். நறுக்கிய துண்டின் நடுவே கீறி விடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன்டும் கிச்சன்குயின் தெரசாக்கு வாழ்த்துக்கள்.பச்சடி நாங்களும் இப்படிதான் செய்வோம்.கத்திரிக்காய் ரௌன்டா கட்பன்னி செய்வோம்.சூப்பர் எல்லா ரெசிபியும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிசாம்மா..