சம்பல் ரொட்டி

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வசந்தா குமாரி அவர்கள் வழங்கியுள்ள சம்பல் ரொட்டி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வசந்தா குமாரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா - 50 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
பூண்டு - 2
உப்பு - 10 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி


 

மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை அம்மியில் லேசாக தட்டி அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், பூண்டு சேர்த்து அரைக்கவும். (வெங்காயத்தை மையாக அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைக்கவும்). பிசைந்து ஊற வைத்த மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து நடுவில் அரைத்த விழுதை வைக்கவும்.
அந்த மாவை மீண்டும் உருண்டையாக உருட்டிக் கொண்டு சப்பாத்தி கல்லில் வைத்து போளி செய்வது போல் சற்று தடிமனாக தேய்க்கவும். பின்பு தோசைகல்லில் எண்ணெய் தடவி தேய்த்த ரொட்டியை போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான சம்பல் ரொட்டி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கே சம்பல் ரொட்டி நான் செய்வது கடினம்னு நினைச்சேன் ஈசியாதான் இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.