ஃப்ரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா அவர்கள் வழங்கியுள்ள ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஆப்பிள் - 4
மைதா - 250 கிராம்
சீனி - 100 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையானது
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

சீனியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆப்பிளை தோல் நீக்கி விரல் கன அளவிற்கு வட்டமாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.
பின்பு மைதாவை சோடா உப்புடன் சேர்த்து நன்கு சலித்து உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய ஆப்பிளை மைதா மாவு கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.
ஆப்பிளை மிதமான தீயில் வைத்து பொரித்து எண்ணெயை வடிக்கட்டி எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
பொரித்த பஜ்ஜியின் மேல் அரைத்த சீனியை பரவினாற் போல் தூவவும், அனைத்து ஆப்பிள் துண்டுகளிலும் இதே போல் செய்யவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் .ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் தர்ஷா. சிம்பிள் சூப்பர் ரெசிபி . எல்லா குறிப்பும் சூப்பரா இருக்கு

Be simple be sample

ஆப்பிள் பஜ்ஜி யா? இப்போ தான் கேள்வி படுறேன். கலக்குங்க‌ தர்ஷா வாழ்த்துக்கள௎

அன்புடன்
பாரதி வெங்கட்

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி..வித்தியாசமான டேஸ்ட் செய்து பாருங்க..

திருமதி. ரஸியா வின் குறிப்பு இது. கிச்சன் குயினுக்காக நான் செய்தேன். வாழ்த்துக்கும் வருகைஇக்கும் நன்றி பாரதி..

குறிப்பு கொடுத்த ரஸியாவிற்கும் என் நன்றிகள்..

ஃப்ரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள் தர்ஷா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேவதி..

ஆப்பிளில் பஜ்ஜி புதுமையா இருக்கு தர்ஷா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.