ப்ரெட் ஃப்ரைஸ்

தேதி: February 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. ஹர்ஷா அவர்கள் வழங்கியுள்ள பிரெட் ஃப்ரைஸ் என்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹர்ஷா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் துண்டுகள் - 4
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் / மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு ஒவ்வொரு ப்ரெட்டையும் நீளவாக்கில் நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
அதனுடன் சீரகம் மற்றும் மிளகுத் தூள் அல்லது மிளகாய்த் தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரு பக்கங்களும் சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய ப்ரெட் ஃப்ரைஸ் தயார்.

ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போல நீள நீளமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யக்கூடிய மாலை நேர ஸ்நாக்ஸ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயின்க்கு என் வாழ்த்துகள். ப்ரெட் ஃப்ரைஸ் சூப்பரா இருக்குப்பா.. படங்கள் அனைத்தும் பளீச்.. கலக்குறீங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப நன்றி..