கிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட் - பரிசு பொருட்கள் - அறுசுவை கைவினை


கிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்

திங்கள், 02/02/2015 - 11:48
Difficulty level : Easy
4.4
5 votes
Your rating: None

 

  • சாட்
  • கோல்டன் லேஸ்
  • மெரூன்கலர் ஸ்டிக்கர் பொட்டு
  • பெவிக்கால்
  • கத்தரிக்கோல்
  • வெள்ளைநிற ஸ்டோன்
  • ஃபேப்பரிக் பெயிண்ட் - க்ரீன் கலர்
  • ப்ரஷ்

 

30 செ.மீ நீளம், 20 செ.மீ அகலம் என்ற அளவில் சாட் பேப்பரை நறுக்கி எடுத்து அதனை சரிசமமாக மடித்து வைக்கவும்.

விரும்பிய டிசைன் லேஸை அட்டையின் முன்பக்கத்தில் நான்கு பக்கமும் அதன் நீளம், அகலத்திற்கேற்ப வெட்டி பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும்.

அட்டையின் நடுவில் பெரிய ஸ்டோனை ஒட்டவும். அதன் கீழ் சற்று தள்ளி இருப்பக்கத்திலும் மீடியம் சைஸ் ஸ்டோனை ஒட்டவும். இப்போது இந்த ஸ்டோனை சுற்றி சிறிய ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிடவும்.

க்ரீன்கலர் ஃபேப்பரிக் பெயிண்டால் படத்தில் உள்ளது போல் இலைகள் மற்றும் புல்லு போன்று வரைந்து விடவும். இந்த மூன்று பூக்களுக்கும் இடையில் இரண்டு சிறிய ஸ்டோனை ஒட்டி அதன் மேல் பகுதியில் மட்டும் மூன்று ஸ்டிக்கர் பொட்டை ஒட்டவும்.

அடுத்து பெரிய பூவிற்கு மேல் இரண்டு ஒவல் வடிவ சம்கியை சாய்வாக ஒட்டி வைக்கவும்.

பிறகு ஸ்டிக்கர் பொட்டைக் கொண்டு வண்ணத்துப்பூச்சியின் இறக்கை வடிவம் போல் ஒட்டவும். அதன் பின்னர் பெயிண்டை வைத்து உணர்கொம்புகளை வரைந்து விடவும்.

ஸ்டிக்கர் பொட்டைக் கொண்டு எளிதாக செய்யக்கூடிய க்ரீட்டிங் கார்ட் தயார். உள்ளே உங்களுக்கு விருப்பமான வாசகங்களை எழுதி வாழ்த்துக்களை பரிமாறலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..க்ரீட்டிங் கார்ட்

அழகாக இருக்கிறது. நிறத் தெரிவு அருமை.

‍- இமா க்றிஸ்

WANTED

HOW I GET THIS APP IN MY MOBILE OR HOW I DOWNLOAD THIS

Today I tried this one

Today I tried this one ....feel happy simply super ..