நெத்திலி கருவாடு சுக்கா

தேதி: February 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நெத்திலி கருவாடு - 200 கிராம்
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி


 

வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். முந்திரியை சிறு சிறு துண்டாக உடைத்து வைக்கவும்.
நெத்திலிக் கருவாடை ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். ஊறிய கருவாடை மண் இல்லாமல் அலசி பிழிந்துக் கொள்ளவும். பிறகு அதில் உள்ள நடு முள்ளை உருவி விட்டு சதை பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
கருவாடுடன் மிளகாய்த் தூள், அரை தேக்கரண்டி உப்பு, கார்ன் ஃப்ளார் சேர்த்து பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எண்ணெயை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே போல் பூண்டை உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து மொறு மொறுப்பாக வறுக்கவும். பூண்டையும் எண்ணெய் பிசுப்பு போக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் நெத்திலி கருவாடையும் மொறு, மொறுப்பாக பொரித்து எடுத்து வைக்கவும்.
பிறகு ஒரு கைப்பிடி கறிவேப்பிலை பொரித்து எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் கருவாடுடன் போட்டு ஒன்றாக சேர்த்து கையினால் கலந்து வைக்கவும். சுவையான நெத்திலி கருவாடு சுக்கா ரெடி

எல்லாவற்றையும் மிதமான தீயில் வைத்தே பொரிக்கவும். அதிக தீயில் பொரித்தால் கருகிவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நெத்திலி சுக்கா தூளா இருக்கே.. கடைசிபடம் எனக்கு தான் எல்லாம்... கலக்குறீங்க மெர்சி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்களுக்கில்லாமலா சிஸ். எடுத்துகங்க‌. வாழ்த்தியதற்கு மிக்க‌ நன்றி சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

குறிப்பினை வழங்கி வெளியிட்ட‌ அட்மின் குழுவிற்கு என் நன்றிகள்.

சுக்கா சூப்பர்ங்க‌. ரொம்ப‌ ரொம்ப‌ தேங்க்ஸ் டீம்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எல்லா குறிப்புகளின் செய்முறை அருமையோ அருமை. நெத்திலி பார்க்கவே சாப்பிடணும் போன்றிருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :)

மெர்சி ரொம்ப ரொம்ப அருமையா இருக்குப்பா.பார்க்கும்போதே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு.சமையலில் ரொம்ப அனுபவமோ?நல்லாயிருக்கீங்களா?பசங்க எப்படி இருக்காங்க?

அன்பு தோழி. தேவி

வாழ்த்துக்கு நன்றி சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வாழ்த்துக்கு நன்றிப்பா. அனுபவம்லா இல்லப்பா. இப்போதான் சமைக்க‌ ஆரம்பித்திருக்கிறேன். போட்டோஸ் நான் எடுக்கும்போது சுமாராதான் வந்தது. நம்ம‌ டீம்தான் அழகாக‌ எடிட் செய்து ஃபினிசிங் டச் கொடுத்துருக்காங்க‌.

நான் நல்லாருக்கேன். பசங்களும் நல்லாருக்காங்க‌. இந்த‌ ஒருமாதமாதான் ஹாஸ்பிடல் பக்கம் போகாம‌ இருக்கேன். விசாரித்ததற்கு ரொம்ப‌ நன்றி. நேற்றுதான் உங்களுக்கு பதிவு போடலாம்னு இருந்தேன். ஆளயே காணோம்னு.

நீங்க‌ எப்டி இருக்கீங்க‌? பசங்க‌ எப்டி இருக்காங்க‌? அஸ்வத் சார் என்ன‌ பண்றார். குட்டி என்ன‌ பண்ணுது. பெயர் என்ன‌ வச்சுருக்கீங்க‌?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மாமியார் வீட்டுக்கு வந்துருக்கேன்ப்பா.திங்கள் அன்றுதான் கிளம்பி வந்தோம்.பசங்க நல்லாயிருக்காங்கப்பா.பையன் பெயர் கிருஷ்ணன் என்ற கிஷோர். அஸ்வத் சாரும் குட்டியும் சேர்ந்து சேட்டை பண்றாங்க.இப்பதான் மாமியார்க்கு என் பையன் சேட்டை தெரிகிறது.

அன்பு தோழி. தேவி