சேனைக்கிழங்கு 65

தேதி: February 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராதா ஹரி அவர்கள் வழக்கியுள்ள சேனைக்கிழங்கு 65 குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ராதா ஹரி அவர்களுக்கு நன்றிகள்.

 

சேனைக்கிழங்கு - 250 கிராம்
மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
சேனைக்கிழங்கின் தோலை சீவிவிட்டு, தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுத்து சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவிடவும்.
பிறகு வெந்த கிழங்குத் துண்டுகளின் மேல் மசாலாத் தூள், உப்பு மற்றும் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து தேவையானால் கலர் பவுடர் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் மசாலாவில் பிரட்டி வைத்துள்ள கிழங்கைப் எண்ணெயில் போட்டு முறுகளாக பொரித்தெடுக்கவும்.
மொறுமொறுப்பான சேனைக்கிழங்கு 65 ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சேனைக்கிழங்கு 65 சூப்பர இருக்கு. எல்லா குறிப்பும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

வாழ்த்துக்கு நன்றி தர்ஷா.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் குழு மற்றும் குறிப்பினை வழங்கிய‌ திருமதி. ராதா ஹரி அவர்களுக்கும் நன்றி.

ரொம்ப‌ கிரிஸ்பியா சுவைக்க‌ சூப்பரா இருந்த்து இந்த‌ ரெசிபி. நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!