தக்காளி ஊறுகாய்

தேதி: February 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹமீது பாத்திமா அவர்களின் தக்காளி ஊறுகாய் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹமீது பாத்திமா அவர்களுக்கு நன்றிகள்

 

பெங்களூர் தக்காளி - அரைக் கிலோ
பட்டை வத்தல் - 30 எண்ணிக்கை
நல்லெண்ணெய் - 150 கிராம்
நாட்டுப்பூண்டு - 100 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 4 கொத்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை வேக வைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பட்டை வத்தல் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கியவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
அதில் வெந்தயப்பொடி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக வதக்கவும். கலவை நன்கு சுருண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை வைத்திருந்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் நல்ல காம்பினேஷன்.

தக்காளி நல்ல பழமாக சிவப்பாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கலர் கிடைக்கும்.

தக்காளி வேகும் போது சுவைத்து பார்த்து இனிப்பாக இருந்தால் சிறிது புளி சேர்த்து வேகவிடவும்.

ஆறியதும் ஒரு பாத்திரத்தில் போட்டு 15 முதல் 20 நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வெளியில் வைத்திருந்தால் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்!! சூப்பர். இது தான் முதல் முறை நீங்க கிச்சன் குயின் ஆயிருக்கிறது?? மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மீனாள்... இனி வரும் பகுதிகளில் தொடர்ந்து பங்களிக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எல்லாமே ரொம்ப‌ நல்லா செய்து இருக்கீங்க‌. அருமையா இருக்கு. பட்டை வத்தல்னா என்ன?

எல்லாம் சில‌ காலம்.....

அருமையா ஊறுகாய் பார்க்கவே நல்லாருக்கு மீனா சூப்பர் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பினை மற்றும் படங்களை மிக‌ அழகாக்கி வெளியிட்ட‌ அறுசுவை குழுவினருக்கு மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment

பார்க்கவே சூப்பரா இருக்கு. எல்லா குறிப்பும் அழகா இருக்கு வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் வனி. நீங்க‌ கொடுத்த‌ ஊக்கம் தான். உங்கள் வாழ்த்திற்கு மிக்க‌ நன்றி. இனி வரும் பகுதிகளில் என்னால் முடிந்த‌ பங்களிப்பு தர்ரேன். இந்த‌ முறை நடந்த‌ தவறை போல‌ நடக்காமல் பார்த்து கொள்கிறேன்.

Expectation lead to Disappointment

உங்கள் வருக்கைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க‌ நன்றி தோழி. பட்டை வத்தல் என்றால் காய்ந்த‌ மிளகாய்.

Expectation lead to Disappointment

உங்கள் வருக்கைக்கும், வாழ்த்திற்கும் மிக்க‌ நன்றி சுவர்ணா.

Expectation lead to Disappointment

உங்கள் வருக்கைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க‌ நன்றி தர்ஷா.

Expectation lead to Disappointment

மீனாள் ,
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்
தொடர்ந்து மகுடம் சூடுங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

தக்காளி ஊறுகாய் ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

அன்புடன்
பாரதி வெங்கட்

உங்கள் வாழ்த்திற்கும்,பாராட்டிற்கும் மிக்க‌ நன்றி கவி.உங்களது ஹெல்தி ரெசிபிஸ் அறுசுவை க்கு வருவது இப்போ ரொம்ப‌ அரிதாகிவிட்டது. தொடர்ந்து நிறைய‌ ரெசிபிஸ் தாங்க‌ கவி.

Expectation lead to Disappointment

உங்கள்: வாழ்த்திர்கு மிக்க‌ நன்றி பாரதி. செய்து பார்த்திட்டு சொல்லுங்க‌.

Expectation lead to Disappointment