ராஜ்மா கறி

தேதி: February 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஐரீன் ராஜேஷ் அவர்களின் ராஜ்மா கறி என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஐரீன் அவர்களுக்கு நன்றிகள்.

 

ராஜ்மா - 2 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - 3
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 12 பல்
மிளகாய் வற்றல் - ஒன்று
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
வெஜிடபுள் ஆயில் - அரை கப்
தண்ணீர் - 4 1/2 கப்
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு தாளித்து நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி கூழாகி அவற்றிலிருந்து எண்ணெய் பிரியும் வரை சில நிமிடங்கள் இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் ராஜ்மா சேர்த்து கிளறவும்.
இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி குக்கரை மூடி அதிக தீயில் வைத்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து குறைந்த தீயில் வைத்து மேலும் 20 நிமிடங்கள் சமைக்கவும்.
குக்கரைத் திறந்து அகப்பையின் பின்புறத்தால் பருப்பை மசித்து விட்டு கரம் மசாலாத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எல்லாமே அருமை.

எல்லாம் சில‌ காலம்.....

கிச்சன் குயின் மீனாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) கலர்ஃபுல் டிஷ்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கிச்சன் குயினாக‌ என்னை தேர்வு செய்து எனது குறிப்புகள் மற்றும் படங்களை மிக‌ அழகாக‌ வெளியிட்ட‌ அறுசுவை மற்றும் டீமி ற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

Expectation lead to Disappointment

மிக்க‌ நன்றி பாலா.

Expectation lead to Disappointment

மிக்க‌ நன்றி சுவா.

Expectation lead to Disappointment