மட்டன் பெப்பர் ஃப்ரை

தேதி: February 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

மட்டன் - அரை கிலோ
மிளகு‍ - 2 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு ‍- 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
பூண்டு ‍- 10 பற்கள்
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான‌ அளவு
தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க‌


 

மிளகுடன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து மையாக‌ அரைத்துக் கொள்ளவும். மட்டனைச் சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் சுத்தம் செய்த‌ மட்டனைச் சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் அரைத்த‌ விழுது மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறி, உப்பு போட்டு குக்கரை மூடி 4 முதல் 5 விசில் வரும் வரை மட்டனை வேக‌ விடவும்.
பின்னர் திறந்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கவும். சுவையான‌ மட்டன் பெப்பர் ஃப்ரை தயார். ரச‌ம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அருமையாக‌ இருக்கும்.

இதே போல் அரைத்த‌ மசாலாவுடன் கறி, உப்பு சேர்த்து வேக வைத்து, அதன் பிறகு தாளித்து நீளமாக‌ நறுக்கிய‌ வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்த கறியைச் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

காரத்திற்கேற்ப‌ மிளகு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரொம்ப‌ பிடிச்ச‌ மட்டன் பெப்பர் ப்ரை... குறிப்பு சூப்பர்

"எல்லாம் நன்மைக்கே"

கலக்கலா இருக்கு. அருமையா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர் பிரியா காரசாரமான குறிப்பு எனக்கும் ரொம்ப பிடிக்கும் மட்டன் பெப்பர் ஃப்ரை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.