கேரட் இலை வறை

தேதி: February 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கேரட் இலை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 8
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 கரண்டி
தாளிக்க :
கடுகு, சோம்பு, கறிவேப்பிலை


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கேரட் இலைகளை காம்பு நீக்கி தண்ணீரில் மண், தூசி இல்லாமல் நான்கு அல்லது ஐந்து முறை நன்றாக அலசவும்
அலசிய கேரட் இலைகளை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட் இலையை சேர்த்து பிரட்டவும்.
இலை ஓரளவிற்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வதங்கியதும் இறக்கவும்
சுவையான கேரட் இலை வறை ரெடி

இதனுடன் கேரட் சேர்த்தும் வறுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முள்ளங்கி இலை சமைக்கலாம்னு அம்மா சொல்லிக்கொடுத்தாங்க... கேரட் சமைக்கலாம்னு இப்ப தான் பார்க்கறேன் :) கிடைக்குமா தெரியல, இதுவரை இங்கு பார்த்ததில்லை. கிடைச்சா கட்டாயம் செய்து பார்க்கறேன்.... படம் சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு விருப்பமான கரட் இலை வறை. அந்த வாசம் விருப்பம். முதல் எல்லாம் இதுக்காகவே கரட் வளர்ப்பன். இப்ப.. ;) ட்ரிக்ஸி சாப்பிடுறதால எனக்குக் கிடைக்குது இல்லை. அடுத்த தரம் கரட் கீரை கிடைக்கும் போது கட்டாயம் தர்ஷாட குறிப்பின்படி சமைச்சுப் பார்ப்பன்.

‍- இமா க்றிஸ்

ஓஹ் கேரட் கீரையை இப்படியும் சமைக்கலாமா சூப்பர்ங்க ஆனா இங்க நாங்க கேரட்ல கீரையை பாத்ததே இல்லையே பாக்கலாம் கிடைச்சா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கேரட் இலை ல செஞ்சு இப்ப தான் பாக்கிறேன். ரொம்ப நல்லாருக்கு

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

மீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு என் நன்றிகள்..

கேரட் இலை பற்றி இங்கு வந்த பின் தன் தெரியும். கிடைக்கும் போது செய்து பாருங்க. பதிவுக்கு ரொம்ப நன்றி..

எனக்கும் வாசம் பிடிக்கும். கேரட் வாங்கும் போது இலையோட வாங்கிவிடுவேன்.
இலை கிடைக்கும் போது செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி இமாம்மா..

இலை கிடைக்கும் போது செய்து பாருங்க. ரொம்ப நன்றி சுவா..

ரொம்ப நன்றி..