facial

14 வயது பொண்ணுக்கு பேஷியல் பண்ணலாமா. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

பண்ணலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பொருள் ஒட்ஸ் மற்றும் தயிர் கலந்து முகத்தில் போடலாம். பார்லர் செல்வதை தவிர்க்கலாம்.

எனக்கும் தோழி சொன்ன கருத்து தான்... நல்லா ஆரோக்கியமா இருக்கிற சருமம், எதுக்காக ஃபேஷியல்? செய்ய விரும்பினா வீட்டில் கடலை மாவு, பால், தயிர், சுத்தமான சந்தனம், மஞ்சள் என்று அவருடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்றபடி எதாவது செய்யலாமே. ஃபேஷியல் செய்தால் ஸ்கின் பாதிக்கப்படக்கூடும்... தேவை இல்லாமல் இந்த வயதில் துவங்க வேண்டாமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//14 வயது பொண்ணுக்கு பேஷியல் பண்ணலாமா.// பண்ணலாம். மிக மிக அவசியம் என்றால் மட்டும்.

என்ன காரணத்துக்காக ஃபேஷியல் செய்ய நினைக்கிறீங்க? அதை முதலில் சொல்லுங்க.

ஃபேஷியல் செய்யும் 11 வயதுக் குழந்தையை எனக்குத் தெரியும். காரணம் இருக்கு; அத்தியாவசியம் என்கிறதால டாக்டர்கள் செய்யச் சொல்லி இருக்காங்க.

‍- இமா க்றிஸ்

முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளது. அதனால்தான் அம்மா செய்யலமா?

பருவுக்கு ஸ்கின் டாக்டரை பார்க்கணும்... ஃபேஷியல் பண்ணா சரியாகாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்