கேரட் பர்ஃபி

தேதி: February 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி அவர்களின் கேரட் பர்பி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

கேரட் துருவல் - 2 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
பால் - 2 கப்
சீனி - 2 கப்
நெய் - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 10


 

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதில் துருவிய கேரட்டை போட்டு ஒரு முறை கிளறி விட்டு ஒரு கப் பாலை ஊற்றி கேரட்டை வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
பால் வற்றி வரும் பொழுது தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து மேலும் ஒரு கப் பாலை ஊற்றி கேரட் துருவலுடன் தேங்காய் சேர்ந்து வெந்து பால் வற்றி வரும் வரை கிளறவும்.
பால் வற்றியதும் 2 கப் சீனி சேர்த்து கிளறி விடவும்.
இடையிடையே நெய் ஊற்றி அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கேரட், தேங்காய் துருவல் மற்றும் சீனி எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் கேரட் கலவையை கொட்டி வில்லைகள் போட்டு அதன் மேல் வறுத்த முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
ஆறிய பிறகு ஒரு கத்தியினால் வில்லைகளை தனித்தனியே பிரித்து துண்டுகளாக எடுத்து பரிமாறலாம். சுவையான கேரட் பர்ஃபி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் சூப்பர், கலர்புல் அன்ட் யம்மி டரெசிபி.
வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

சுபி மிக்க நன்றி பா.

இதுவும் கடந்து போகும்

சூப்பரா செஞ்சிருக்கிங்க, கடைசி படம் அழகு. பார்க்கும் போதே சாப்பிட தோணுது.
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

அழகாகவும் எளிமையாகவும் இருக்குது கேரட் பர்ஃபி. படங்களும் கலக்கலா இருக்குங்க‌. நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சூப்பரா செய்து இருக்கீங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கு. பயங்கர‌ கலர்ஃபுல். சூப்பரா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

I also tried its so yammy & my hubby also liked it .thanx

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar