பச்சை மொச்சைக்குழம்பு

தேதி: February 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் பச்சை மொச்சைக்குழம்பு என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

பச்சை மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 6 பல்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
தாளிக்க :
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்லு
புளி - ஒரு கொட்டைப்பாக்களவு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மொச்சை பயறை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். தேங்காயுடன் ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்து வைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வதக்கியவற்றுடன் ஊற்றி வேக வைத்த பச்சை மொச்சை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான பச்சை மொச்சை குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் :) முதல் முறையா உங்கள் குறிப்புகள் வருதுன்னு நினைக்கிறேன். அதுவும் கிச்சன் குயின் பகுதிக்கு. ஆனால் உங்கள் படங்கள் பார்த்தா அப்படி தெரியல... பளிச்சுன்னு ப்ரொஃபஷனல் போல ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க. மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். தேர்வு செய்திருக்கும் குறிப்புகளும் வெகு ஜோர். எல்லாமே சூப்பருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பினை வழங்கிய திருமதி. சரஸ்வதி அவர்களுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

வனி அக்கா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்

பச்சை மொச்சை குழம்பு யம்மி.. படங்கள் ரொம்ப‌ அழகா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"