சைனீஸ் சிக்கன் பக்கோடா

தேதி: February 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சையத் கதீஜா அவர்களின் சைனீஸ் சிக்கன் பக்கோடா என்கின்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய கதீஜா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழி கறி - 8 துண்டுகள்
வெங்காயம் - சிறிது
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - சிறிது (விரும்பினால்)
மைதா - சிறிது


 

கறியை முள் இல்லாமல் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கறியுடன் இஞ்சி, பூண்டு, சில்லி பேஸ்ட், வெங்காயம், வெள்ளை மிளகு, உப்பு, அஜினோமோட்டோ போட்டு பிரட்டவும். அதனுடன் கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் கறியை போட்டு பொரித்து எடுக்கவும்
சுவையான சைனீஸ் சிக்கன் பக்கோடா தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டக் டக்னு பட்டத்த‌ தட்டிட்டு போயிட்டே இருக்கீங்க‌. வாழ்த்துக்கள். நல்லா இருக்கு இந்த‌ சிக்கன் பகோடா. எல்லாமே நல்லா செய்து இருக்கீங்க‌. வழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....