மைதா தோசை

தேதி: February 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரம்யா கார்த்திக் அவர்கள் வழங்கியுள்ள மைதா தோசை என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரம்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா - ஒரு கப்
ரவை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - சிறிது


 

தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாவை எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ரவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
எளிதாக செய்யக்கூடிய மைதா தோசை ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்