கீரை மிளகூட்டல் - 2

தேதி: February 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. ஜெயந்தி அவர்களின் இந்த கீரை மிளகூட்டல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்பினாச் - ஒரு கட்டு
துவரம் பருப்பு - ஒரு சிறிய கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
அரைக்க :
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
தனியா - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்
தாளிக்க:
கடுகு, சீரகம்
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கீரை, வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி விடவும்
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து கீரை கலவையுடன் சேர்க்கவும்.
சுவையான கீரை மிளகூட்டல் தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்