தேதி: February 12, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. காந்திசீதா அவர்களின் இத்தாலியன் உணவான ஈசி பாஸ்தா குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய காந்திசீதா அவர்களுக்கு நன்றிகள்.
பாஸ்தா - ஒரு கப்
ஓலிவ் எண்ணெய் - சிறிது
பூண்டு - 10 பல்
மிளகாய் - 4
பார்ஸ்லே இலை - சிறிது (dry or fresh)
பெப்பர் - சிறிது
உப்பு - சிறிது
சீஸ் - தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது சிறிது உப்பு, ஓலிவ் எண்ணெய் மற்றும் பாஸ்தாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

பாஸ்தா வெந்ததும் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து அதனுடன் ஓலிவ் எண்ணெய் கலந்து வைக்கவும்.

கடாயில் ஓலிவ் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதில் பார்ஸ்லே இலை, வேக வைத்த பாஸ்தா, பெப்பர், உப்பு சேர்த்து கிளறி துருவிய சீஸ் சேர்த்து இறக்கவும்.

சுவையான பாஸ்தா தயார். சூடாக பரிமாறவும்.

Comments
KavithaUdayakumar
கவிதா அக்கா ரெசிபி சோ சிம்பிளி அன்ட் சூப்பர்.. :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்